யார் இந்த வி.கே.குருசாமி? இவருக்கும் ராஜபாண்டிக்கும் என்ன பிரச்சனை? இதுவரை 15 கொலைகள்! அலறும் மதுரை!
மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றிந்திருந்த திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமியின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Madurai
மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் திமுக நிர்வாகி வி.கே. குருசாமி. திமுக முன்னாள் மண்டலத் தலைவரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மண்டல தலைவர் மறைந்த ராஜபாண்டி. 2001 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போஸ்டர் ஒட்டியதில் இருதரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது தொடங்கிய பிரச்சனை இன்னும் ஓயவில்லை. குடும்பத்தினரிடையே உள்ள முன் பகை காரணமாக பழிக்குப் பழி வாங்கும் சம்பவமாக இதுவரை ராஜபாண்டியின் இரு மகன்கள், வி.கே.குருசாமியின் மகன் உள்பட 15க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் மதுரையில் அரங்கேறியுள்ளன.
Madurai
இவற்றை முடிவுக்குக் கொண்டு வர காவல்துறை பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டது. எதுவும் பலன் அளிக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் தங்கியிருந்த வி.கே.குருசாமியை ராஜாபாண்டி தரப்பு ஆயுதங்களுடன் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில், அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
arrest
இந்நிலையில், உடல்நிலை பாதித்ததால் கீரைத்துறையிலுள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே போலீசார் ரோந்து பணியின் போது ஆயுதங்களுடன் இருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், காமராஜபுரம் குறுக்குத் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்ற மாட்டு மணி(32) என்பதும் வி.கே.குருசாமியின் வீட்டின் அருகே ஆயுதங்களுடன் கண்காணிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரை கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.