விராட் கோலியை அணியிலேயே சேர்க்க கூடாது – மேத்யூ ஹைடன்!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலியை சேர்க்கவே கூடாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் கூறியுள்ளார்.

T20 World Cup 2024
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது வென்றார். நடந்து முடிந்த ஐபிஎல் 2024 தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வென்றிருந்தார்.
T20 World Cup 2024
இதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியும் இடம் பெற்றுள்ளார். ஆனால், அவர் எந்த இடத்தில் இடம் பெற்று விளையாட போகிறார் என்ற விவாதம் எழுந்துள்ளது.
T20 World Cup 2024
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் கூறியிருப்பதாவது: விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கி விளையாடவில்லை என்றால் அவரை அணியிலேயே சேர்க்க கூடாது என்று விமர்சனம் செய்துள்ளார்.
Virat Kohli T20 World Cup 2024
மேலும், எப்போதுமே பிளேயிங் 11ஐ வலது மற்றும் இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் வகையில் பேட்டிங் வரிசையை அமைக்க வேண்டும். ஆனால், டாப் 5 வரிசையில் மொத்தமாகவே வலது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் வகையில் அணியை தேர்வு செய்தால், அது எதிரணிக்கு சாதமாக இருக்கும். ஆதலால், ரோகித் சர்மாவிற்கு பதிலாக நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலியை யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் தொடக்க வீரராக களமிறக்கி விளையாட வைக்க வேண்டும்.
T20 World Cup 2024
ரோகித் சர்மாவை மிடில் ஆர்டரில் விளையாட வைக்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் 4ஆவது வீரராக களமிறங்கி விளையாடிய போது தான் ரோகித் சர்மா அதிக ரன்களை குவித்திருக்கிறார். ஆதலால், அவரை மிடில் ஆர்டரில் களமிறக்க வேண்டும் அவர் கூறியுள்ளார். இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்த சுரேஷ் ரெய்னா கூறியிருப்பதாவது: 3ஆவது வரிசையில் விராட் கோலி விளையாடி அதிக ரன்கள் குவித்திருக்கிறார்.
Virat Kohli
ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, 3ஆவது வரிசையில் தான் விளையாட வேண்டும். நல்ல ஃபார்மில் இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கி விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.