- Home
- Gallery
- இந்த உணவுகளை சாப்பிட்டு தான் இவ்ளோ ஃபிட்டா இருக்காங்களா? ரஜினி, கமல், விஜய்யின் உணவு பழக்கங்கள்..
இந்த உணவுகளை சாப்பிட்டு தான் இவ்ளோ ஃபிட்டா இருக்காங்களா? ரஜினி, கமல், விஜய்யின் உணவு பழக்கங்கள்..
ரஜினி, கமல், விஜய் ஆகியோரின் அன்றாட உணவு பழக்ககங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Tamil Actors Food Habits
திரை பிரபலங்கள் பலரும் தங்கள் உடலமைப்பைப் பராமரிக்க கடுமையான உணவுமுறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு பிரபலத்திற்கும் வெவ்வேறு உடற்பயிற்சி இலக்குகள் மற்றும் உணவுத் தேவைகள் உள்ளன. முறையான உடற்பயிற்சி, கடுமையான டயட், சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது என உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றனர். இதனால் எத்தனை வயதானாலும் உடல் எடை, ஆரோக்கியம் ஆகியவற்றை பரமாரிப்பதுடன், ஃபிட்டாகவும் இருக்கின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், விஜய் ஆகியோரின் அன்றாட உணவு பழக்ககங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Actor Vijay food habits
நடிகர் விஜய் :
நடிகர் விஜய் அசைவ உணவுகளையே அதிகமாக விரும்பி சாப்பிடுவாராம். சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் என அசைவ உணவு இல்லாமல் ஒரு நாள் கூட சாப்பிடமாட்டாரம். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்றால் விஜய்க்கு மிகவும் பிடிக்குமாம்.. அசைவ உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடும் விஜய் பெரும்பாலும் நொறுக்கு தீனிகளை சாப்பிட விரும்பமாட்டாரம்.
Actor Vijay Food Habit
நடிகர் விஜய் காலையில் 2 இட்லி, சட்னி, 6 முட்டையின் வெள்ளைக்கரு, கொஞ்சம் வெள்ளரிக்காய் ஆகியவற்றை எடுத்துக்கொள்வாராம். மதிய உணவுக்கு முன்பு இளநீர் அல்லது பீனட் பட்டர் அல்லது பழங்களை எடுத்துக்கொள்வாராம்.
மதிய உணவுக்கு 200 கிராம் பிரவுன் ரைஸ், 200 கிராம் சிக்கன் அல்லது மீன், 100 கிராம் காய்கறிகளை விஜய் எடுத்துக்கொள்வாராம். தோசை, சிக்கன் குழம்பு ஆகியவை தான் விஜய்யின் ஆல் டைம் ஃபேவரைட் உணவுகளாம்.
இரவு உணவுக்கு வெறும் பழங்களை மட்டுமே விஜய் எடுத்துக்கொள்வாராம். ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, வாழைப்பழம் கலந்த சாலடை இரவு சாப்பிடுவாராம்.
Rajinikanth Food Habit, Diet
நடிகர் ரஜினி :
ரஜினிக்கு அசைவ உணவுகள் தான் மிகவும் பிடிக்குமாம். ஆனால் 2014-ல் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு, தற்போது சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறார். காய்கறிகள், பழங்கள், நட்ஸ், சிறு தானிய உணவுகளை சாப்பிடுகிறாராம்.
Rajinikanth Food Habit
காலையில் இட்லி அல்லது பிரட் டோஸ்ட், பழங்களை உணவாக எடுத்துக்கொள்வாராம். மதியம் சாதம், சாம்பார், ரசம், காய்கறிகள் அல்லது வத்தக்குழம்பு ஆகியவற்றை சாப்பிடுவாராம். இரவும் லைட்டான உணவை ரஜினி எடுத்துக்கொள்வாராம். பால், தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவுகளை ரஜினி தவிர்த்துவிடுவாராம்.
Kamalhaasan Food habit
நடிகர் கமல்ஹாசன் :
கமல்ஹாசன் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சரிவிகித உணவு முறையை பின்பற்றி வருகிறார். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை தவிர்த்து வருகிறாராம். முட்டை, சிறு தானிய தோசை மற்றும் பழங்கள் அடங்கிய புரதச்சத்து நிறைந்த காலை உணவில் கமல்ஹாசன் தனது நாளைத் தொடங்குவாராம்.
Kamalhaasan Food habit, diet
மதிய உணவிற்கு, கமல்ஹாசன் கிரில்டு கோழி அல்லது மீன், பிரவுன் ரைஸ் மற்றும் காய்கறிகள் அடங்கிய லேசான உணவை சாப்பிடுவாராம். இரவு உணவையும் மிகவும் லைட்டாகவே கமல் எடுத்துக் கொள்வாராம். சூப், சாலட் மற்றும் கிரில்டு மீன் அல்லது சிக்கன் ஆகியவற்றை எடுத்துக்கொள்வாராம்.