மழைக்காலத்தில் உங்கள் தலைமுடியில் துர்நாற்றம் அடிக்குதா..? இதோ அதற்கான சில டிப்ஸ்..!
Hair Smell During Rainy Season : மழைக்காலத்தில் முடியில் துர்நாற்றம் வீசுவது வழக்கம். இதனால் பலர் சிரமப்படுகிறார்கள். நீங்களும் அப்படி சிரமப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்கான பதிவு தான் இது.

மழைக்காலத்தில் முடியில் துர்நாற்றம் வீசுவது வழக்கம். இதனால் பெரும்பாலானோர் சிரமப்படுகிறார்கள். காரணம், உச்சந்தலையில் அழுக்குகள் தங்குவது, வியர்வை வெளியேறுவது போன்றவற்றால் முடியில் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று ஏற்படும். இது தலை முடியில் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால், மழைக்காலத்தில் முடியிலிருந்து வரும் துர்நாற்றத்தை போக்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும் அவை.
துளசி தண்ணீர்: முடியிலிருந்து வரும் துர்நாற்றத்தை நீக்க துளசி தண்ணீர் உங்களுக்கு உதவும். துளசி நீரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தொற்று நோயை நீக்குகிறது. இதற்கு துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீர் நன்கு ஆறிய பிறகு அந்த நீரால் தலைக்கு குளிக்கவும். இது உங்கள் தலையில் இருந்து துர்நாற்றத்தை நீக்கும்.
இதையும் படிங்க: Rosemary Oil for Hair : ரோஸ்மேரி எண்ணெய் தலைமுடிக்கு நல்லதுனு சொல்றாங்களே.. அது ஏன் தெரியுமா?
எலுமிச்சை சாறு: தலைமுடியில் இருந்து துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து குளிக்கவும். முக்கியமாக நீங்கள் தலைமுடிக்கு ஷாம்பு போட்ட பிறகு இந்த நீரில் குளிக்கவும்.
இதையும் படிங்க: உங்கள் கூந்தல் கட்டுக்கடங்காமல் வளர இந்த ஒரு இலையில் ஹேர் மாஸ்க் போடுங்க..
பேக்கிங் சோடா: துர்நாற்றத்தை நீக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம் தெரியுமா..? இதற்கு பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து அந்த நீரால் தலைமுடியை கழுவும். மழைக்காலத்தில் உங்கள் தலை முடிக்கு கூடுதல் கவனம் செலுத்த, நீங்கள் வெளியில் செல்லும்போதெல்லாம் தலை முடியை மூடி கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D