பெண்களே! இனி கவலை வேண்டாம்...செயற்கை நகைகளால் வந்த தோல் அலர்ஜி... நீக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!
செயற்கை நகைகளில் நிக்கல் முக்கிய உலோகமாகும், இது சிலருக்கு தோல் அலர்ஜியை ஏற்படுத்தும்.
தங்க நகைகள் மட்டுமல்ல, செயற்கை நகைகளும் பெண்களுக்குப் பிடிக்கும். இன்னும் சொல்லப் போனால் பெண்கள் தங்க நகைகளை விட செயற்கை நகைகளை தான் அதிகமாக வாங்குகிறார். காரணம், இவற்றில் அழகழகான விதவிதமான டிசைன்கள் இருக்கும்.
ஆனால் இவற்றில் நிக்கல் என்ற முக்கிய உலோகம் கலந்திருப்பதால் சிலருக்கு ஒத்துக்காது. அது அவர்களுக்கு தோல் அலர்ஜி, தோல் சிவத்தல், சொறி, அரிப்பு போன்றவற்றை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் இனி கஷ்டப்பட வேண்டியதில்லை. இப்போது கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றினால், நல்ல பலன் கிடைக்கும். என்று பார்ப்போம்.
இதையும் படிங்க: Brinjal Allergy : கத்திரிக்காய் அலர்ஜி ஏற்படுத்துமா? 6 திடுக்கிடும் அறிகுறிகள் இதோ..!!
செயற்கை நகைகளை அணிவதற்கு முன், அந்த இடத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இப்படி செய்தால் அலர்ஜி வராது. தோல் அலர்ஜி உள்ளவர்கள் இறுக்கமான நகைகளைத் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: வெங்காயத்தை சுற்றி இருக்கும் கருப்பு அச்சு இவ்வளவு ஆபத்து விளைவிக்குமா? இது தெரியாம போச்சே..!!
எல்லாருக்கும் வியர்வை வருவது பொதுவானது. நம் உடல் வியர்க்கும் போது நகையும் ஈரமாகும். அப்படி ஈரமான நகையை சிலர் பெட்டியில் அந்த ஈரத்துடனே பெட்டியில் வைப்பர். இப்படிச் செய்தாலும் சருமத்தில் அலர்ஜி ஏற்படும் அபாயம் உள்ளது. நகைகளை கழற்றிய பின் சிறிது நேரம் காய விடவும். பின்னர் பெட்டியில் வைப்பது நல்லது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
செயற்கை நகைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் நகைகளுக்குள் பிளாட்டினம் பூச்சு போட வேண்டும். நகைகளை அகற்றிய பின் அரிப்பு ஏற்பட்டால், கற்றாழை ஜெல்லை அந்த இடத்தில் தடவவும். இப்படி செய்தால் ஓரளவு நிம்மதி கிடைக்கும்.