- Home
- Gallery
- "இது 10 வருட தவம்" 42 வயதில் மகிழ்ச்சியான செய்தி சொன்ன நடிகை ஜூலி - எமோஷனலான "பேபி ஷவர்" பிக்ஸ் இதோ!
"இது 10 வருட தவம்" 42 வயதில் மகிழ்ச்சியான செய்தி சொன்ன நடிகை ஜூலி - எமோஷனலான "பேபி ஷவர்" பிக்ஸ் இதோ!
Actress Julie : சின்னத்திரை சீரியல் உலகை பொறுத்தவரை, நடிகை ஜூலி என்றால் பெரிய அளவில் பிரபலம். தமிழில் பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

julie
42 வயது நிரம்பிய ஜூலியின் இயற்பெயர் விசாலாட்சி, ஆனால் சீரியல் நடிகை ஜூலி என்று சொன்னால் தான் அனைவருக்கும் சட்டென்று நினைவில் வரும். சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் என்று இவர் நடிக்காத சேனல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இவர் மிகவும் பிரபலம்.
actres julie baby shower
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை சீரியல்களில் பயணித்து வரும் நடிகை ஜூலிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமலே இருந்து வந்தது அந்த தம்பதிக்கு, அது மிகப்பெரிய மனவேதனையை அளித்தது.
actress julie
இதற்கிடையில் ஜூலிக்கு இரண்டு முறை அபார்ஷன் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல இடங்களில் தங்களுக்கு குழந்தை இல்லை என்கின்ற வேதனையில் விசாலாட்சியும் அவரது கணவரும் பகிர்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே.
Serial actress julie
இந்த சூழலில், சுமார் 10 ஆண்டுகள் கழித்து தற்பொழுது நடிகை ஜூலி கர்ப்பம் தரித்துள்ளார். 9 மாத கர்ப்பிணியான அவருக்கு, வளைகாப்பு நிகழ்வு கோலாகலமாக நடந்துள்ளது.
julie baby shower
அவரோடு இதுவரை பணியாற்றிய பல முன்னணி சீரியல் நடிகர், நடிகைகள் நேரில் வந்து எமோஷனலாக அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வருகின்றனர். தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.