ரகுவரன் முதல் நக்மா வரை.. உலக நாயகன் கமலுடன் இணைந்து நடிக்காத டாப் தமிழ் நடிகர் நடிகைகள் - பட்டியல் இதோ!
உலக சினிமா வரலாற்றிலேயே சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக விளங்கிவரும் வெகு சில நடிகர்களில் ஒருவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள். நான்கு முறை தேசிய விருது வென்ற இந்த நடிகருடன், அவருடைய சமகாலத்தை சேர்ந்த பல நடிகர்கள் நடிகைகளே இன்றளவும் ஒன்றிணைந்து நடித்ததில்லை தெரியுமா?
Actress Kanaka
இப்பொழுது படங்களில் நடிப்பதில்லை என்றாலும், 80களுடைய இறுதியில் துவங்கி, சுமார் ஐந்து ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் கனகா. இவருடைய கரகாட்டக்காரன் மற்றும் அதிசய பிறவி ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படங்கள். ஆனால் நடிகர் கமலஹாசனின் சமகால நடிகையாக இருந்த போதும், இவர் அவருடன் இணைந்து நடித்ததில்லை.
Actress Nagma
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய மாஸ் திரைப்படங்களில் ஒன்றான பாட்ஷா திரைப்படத்தில் அவருடைய நாயகியாக நடித்த நக்மா, பல முன்னணி தமிழ் நடிகர்களுடன் நடித்துள்ளார். ஆனார் அவரும் உலக நாயகனுடன் இணைந்து நடித்ததில்லை.
Actress Nadhiya
நடிகை நதியா இன்றளவும் இந்திய மொழிகள் பலவற்றுள் நல்ல பல பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மிகச்சிறந்த ஜோடியாக திகழ்ந்த இவர், உலகநாயகன் கமல் அவர்களுடன் நடித்ததில்லை.
Actor Raghuvaran
ரஜினிகாந்துக்கு மட்டுமல்ல, தமிழ் திரையில் உலகத்தில் உள்ள அத்தனை முன்னணி நடிகர்களுக்கும் ஒரு காலகட்டத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரே வில்லன் நடிகர் ரகுவரன் என்றால் அது மிகையல்ல. நடிகர் ரகுவரன் அவர்களும் கடைசிவரை உலக நாயகன் கமல் அவர்களுடன் இணைந்து எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை.
Comedy Actors
அதேபோல மறைந்த நடிகர்கள் மயில்சாமி மற்றும் மனோபாலா ஆகிய இருவரும் உலக நாயகனுடன் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மனோபாலாவும் மறைந்த நடிகர் விவேக் அவர்களும் இந்தியன் 2 திரைப்படத்தில் அவருடன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறி உள்ள சந்தானம் அவர்களும் உலக நாயகருடன் நடித்ததில்லை.