நம்ம சந்திரமுகி லவ்வரை நியாபகம் இருக்கா? நடிகர் வினீத் லேட்டஸ்ட் கிளிக்ஸ் - அந்த பெரிய நடிகையின் சொந்தக்காரர்!
மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என்று பல இந்திய மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகர் வினீத் மிகப்பெரிய பரதநாட்டிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் படங்களில் இவர் நடிப்பதில்லை.
Actor Vineeth
சிறு வயது முதலே பரதநாட்டியத்தில் பெரும் ஆர்வம் கொண்ட நடிகர் வினீத், கேரளாவின் தலைசேரியில் பிறந்தவர். 1985 ஆம் ஆண்டு முதல் மலையாள மொழியில் நடித்து வரும் வினீத் அவர்கள் முதல் முறையாக கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான பரதனின் "ஆவாரம்பூ" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார்.
ரஜினி போட்ட ஆர்டர்? 100 குழந்தைகள் ஆபரேஷனுக்கு 1கோடி வழங்கிய கலாநிதிமாறன் மனைவி! குவியும் வாழ்த்து!
Actor Vineeth Instagram
முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதைப் பெற்ற இவர், அதன் பிறகு புதிய முகம், ஜென்டில்மேன், மே மாதம், காதல் தேசம் என்று தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக மாறினார் என்றால் அது மிகையல்ல. 90களின் துவக்கத்தில் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெண் ரசிகர்கள் இருந்தனர்.
Vineeth family
கடந்த 2004 ஆம் ஆண்டு பிரசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தே வருகிறார். இருப்பினும் அண்மைக்காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சிகளையும் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார் வினீத்.
Vineeth Dancer
கடந்த 2008 ஆம் ஆண்டு இளவேனில் என்கின்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் வெளியான கலைஞரின் உளியின் ஓசை என்ற திரைப்படத்தில் நடித்திருந்த வினீத் அதன்பிறகு சுமார் 11 ஆண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு வெளியான சர்வம் தாளமயம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது பெரிய அளவில் திரைப்படங்களில் இவர் நடிக்கவில்லை என்றாலும் இவர் மீண்டும் தமிழ் திரை உலகில் நடிக்க வர வேண்டும் என்று இவருடைய ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
Padmini
நடிகர் வினித், ராமச்சந்திரன் நாயர் என்பவரின் மருமகனாவார், ராமச்சந்திரன் என்பவர்தான் நாட்டிய பேரொளி பத்மினி அவர்களின் கணவர். திருவாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்படும் பத்மினி குடும்பத்தின் உறவினர் தான் நடிகர் வினீத்.