18 வருஷத்துக்கு முன்னாடி பார்த்த அதே அழகு.. மெழுகு சிலை தோத்துரும் - வைரலாகும் ஸ்ரீதேவி விஜயகுமாரின் கிளிக்ஸ்!
பிரபல மூத்த தமிழ் நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார், கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான நடிகர் சத்யராஜின் ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sridevi
அதைத் தொடர்ந்து சுமார் ஐந்து திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், பிரபாஸ் நடிப்பில் வெளியான ஈஸ்வர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் முதல் முறையாக கதையின் நாயகியாக அறிமுகமானார்.
Actress Sridevi vijayakumar
அதன் பிறகு தமிழில் இவர் முதல் முறையாக கதையின் நாயகியாக அறிமுகமான திரைப்படம் காதல் வைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.கதிர் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவான படம் அதுவென்பது குறிப்பிடத்தக்கது
Sridevi vijayakumar
இறுதியாக இவர் தமிழில் நடித்து வெளியான திரைப்படம் தனுஷ் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான தேவதையை கண்டேன் என்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. உமா என்ற கதாபாத்திரத்தில் அவர் மிக நேர்த்தியாக நடித்திருப்பார்.
Actress Sridevi
கடந்த 18 ஆண்டுகளாக தமிழில் இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் எந்த படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.