- Home
- Gallery
- ஐந்தாவது முறை யுவனோடு இணையும் பிரபல இயக்குனர்.. படத்தின் ஹீரோவே சொன்ன தகவல் - ஒரு Fresh Combo ரெடி!
ஐந்தாவது முறை யுவனோடு இணையும் பிரபல இயக்குனர்.. படத்தின் ஹீரோவே சொன்ன தகவல் - ஒரு Fresh Combo ரெடி!
Yuvan Shankar Raja : தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் யுவன் சங்கர் ராஜா. தந்தையை போலவே தனது மெய்மறக்கவைக்கும் இசையால் ரசிகர்களை கட்டிப்போடும் திறன் கொண்டவர்.

Yuvan
சிறு வயது முதலையே மிக மிக பிஸியான இசையமைப்பாளராக பயணித்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக உள்ள ஒரு புதிய திரைப்படம் குறித்த தகவலை பிரபலம் ஒருவர் தனியார் தொலைக்காட்சியைக்கு அளித்த பெட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் அளித்த தகவல்கள் குறித்து பின்வருமாறு காணலாம்.
'சலார்' படத்தில் இருந்து நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் ஆகாச சூரியன்.. முதல் சிங்கிள் பாடல்! வீடியோ
Yuvan with Director Ram
இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் வெறும் நான்கு திரைப்படங்களை மட்டுமே இயக்கி வெளியிட்டு இருக்கிறார் என்ற பொழுதும், தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த வெற்றி இயக்குனர் தான் ராம். இவருடைய திரைக்கதை ஒரு தனி கதை சொல்லும், இவர் இயக்கத்தில் வெளியான "கற்றது தமிழ்", "தங்க மீன்கள்", "தரமணி" மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளியான "பேரன்பு" உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள்.
Mammootty
தற்பொழுது இவர் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி அவர்களை வைத்து "ஏழு கடல் ஏழு மலை" என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு தமிழ் திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதற்கு முன்னதாக ராம் இயக்கிய நான்கு திரைப்படங்களும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
GV Prakash Kumar
இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள தகவலின்படி ராம், ஐந்தாவது முறையாக யுவன் சங்கர் ராஜா அவர்களுடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கொடுத்தது பிரபல நடிகரும், இசை அமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் தான். ராம் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகவுள்ள அந்த திரைப்படத்தில், தான் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், தற்பொழுது இயக்குனர் ராம் அவர்களுடைய கால் சீட் கிடைக்காத காரணத்தினால் அந்த படம் தள்ளிக் கொண்டே போவதாகவும் அவர் கூறியுள்ளார். முழுக்க முழுக்க காதல் சார்ந்த இந்த படம் விரைவில் துவங்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.