பாசம் காட்டத்தெரியது.. ஆனால் குடும்பம் மட்டும் தான் அவர் வாழ்க்கை - மனம் திறந்த மாரிமுத்துவின் மனைவி!
பிரபல நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து, சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவருடைய மறைவு திரைத்துறையை தாண்டி தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது என்றால் அது மிகையல்ல. அவர் ஏற்று நடித்தது வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும், ஒரு ஹீரோவாக பலர் நெஞ்சில் தடங்களை பதித்து சென்றுள்ளார் மாரிமுத்து.
Director Marimuthu
மாரிமுத்துவின் எதார்த்தமான நடிப்பும், அவரின் வசன உச்சரிப்பும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்க அவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது என்றே சொல்லலாம். முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து வந்த மாரிமுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்து வந்தார். இந்த சூழலில் தான் மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார்.
Actor Marimuthu
இந்த சூழலில் தனது கணவரின் பிரிவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மாரிமுத்துவின் மனைவி மற்றும் அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர், ஒரு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்து நிகழ்ச்சி கலந்துகொண்டுள்ளனர்.
Director Marimuthu
அப்போது பேசிய மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி, அவருடன் பல உருக்கமான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார். அய்யா மாரிமுத்து உங்களுக்கு எப்போதாவது சர்ப்ரைஸ் கிபிட் கொடுத்திருக்குகிறாரா? என்று கேட்டபோது. அவருக்கு அதெல்லாம் தெரியாது, சரியாக பாசம் காட்டகூட தெரியாது. ஆனால் அவருக்கு நாங்கள் மூவர் மட்டுமே உயிர். எங்களுக்காகவே கடைசி வரை வாழ்ந்து சென்றுள்ளார் என்று கண்ணீர் மல்க கூறினார்.
Marimuthu Son
மேலும் தன் மகன், தன்னையும் அவரது சகோதரியையும் நல்ல முறையில் பார்த்துக்கொள்வார் என்றும். அப்படி தான் தன் கணவர் அவர்கள் இருவரையும் வளர்த்துள்ளார் என்றும் பெருமையோடு கூறினார் பாக்கியலட்சுமி. மாரிமுத்துவின் மகனும், தன் ஆசைப்பட்ட அனைத்தையும் செய்து முடிப்பேன் என்று கூறினார்.
சிகெரெட்டால் சூடு வைத்த ரஜினிகாந்த்.. நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களா..!