- Home
- Gallery
- ரிமோட்டில் ஏசியை ஆப் பண்ணாலும்..'இந்த' சுவிட்டை ஆப் பண்ண மறக்காதீங்க.. அப்பதான் கரண்ட் பில் கம்மியா வரும்!
ரிமோட்டில் ஏசியை ஆப் பண்ணாலும்..'இந்த' சுவிட்டை ஆப் பண்ண மறக்காதீங்க.. அப்பதான் கரண்ட் பில் கம்மியா வரும்!
மின்சார கட்டணம் குறைவாக வர, ரிமோட்டில் ஏசியை ஆப் செய்யும்போது, ஸ்டெபிலைசர் சுவிட்டையும் ஆப் செய்ய மறக்காதீர்கள்.

தமிழ்நாட்டில் பொது தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் படிக்கும் மாணவர்களுக்கு எவ்வித தடையுமின்றி, இரவு பகலாகப் படிக்க மின்வினியோகம் அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள் குறித்தும் கூறியுள்ளது.
பொதுவாகவே, வெயில் காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும். இதனால் மின்சார கட்டணம் அதிகமாக வரும். எனவே, ஏசியை வெறுமனே ரிமோட் கண்ட்ரோலில் மட்டும் ஆப் செய்யாமல், ஸ்டெபிலைசரின் சுவிட்சையும் ஆப் செய்ய வேண்டும். இதனால் மின்சாரம் கட்டணத்தை சுலபமாக சேமிக்க முடியும் என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஏசி, ஃபேன் இரண்டையும் ஒரே நேரத்தில் யூஸ் பண்ணலாமா..? அதனால் என்ன ஆகும்.?
அதுமட்டுமின்றி, பலர் ரிமோட்டில் டைமர் செட் செய்து விட்டு இரவில் நன்கு தூங்கிவிடுவர். குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் ரிமோட் ஆட்டோமேட்டிக்காக ஆப் ஆகிறது. ஆனால், ஸ்டெபிலைசர் சுவிட்டை ஆப் செய்தால் மட்டுமே கரண்ட் பில் அதிகம் வருவதை குறைக்க முடியும். இல்லையெனில் கரண்ட் பில் எக்கச்சக்கமாக வருவது உறுதி.
இதையும் படிங்க: EB Bill Hacks!! AC பில் எகிறுதா? இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க.. ஏசி பில் பாதியாக குறையும்!
அதேபோல் நீங்கள் பயன்படுத்தும் அலங்கார விளக்குகள் தேவையற்றது, என்பதால் அவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. எனவே, ஏசியை ரிமோட்டில் ஆப் செய்யும்போது ஸ்டெபிலைசர் சுவிட்டையும் ஆப் செய்ய மறக்காதீர்கள். இதனால் கோடையில் மின்சாரத்தை தங்கு தடையின்றி நாம் பெறலாம்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D