எதிர்நீச்சலில் ஆதி குணசேகரனாக எண்ட்ரி கொடுத்த வேல ராமமூர்த்திக்கு மாரிமுத்துவை விட இத்தனை மடங்கு அதிக சம்பளமா?
மக்களின் மனம் கவர்ந்த எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடிக்க கமிட் ஆகியுள்ள வேல ராமமூர்த்தியின் சம்பளம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
marimuthu, vela ramamoorthy
சன் டிவி சீரியல்களுக்கு எப்பவுமே மக்கள் மத்தியில் மவுசு அதிகம். அதிலும் குறிப்பாக கடந்த ஓராண்டுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் ரீச் ஆனதோடு, டிஆர்பியிலும் சக்கைப்போடு போட்டு முதலிடத்தில் உள்ளது. எதிர்நீச்சல் சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்னர் சன் டிவியின் பிளாக்பஸ்டர் ஹிட் சீரியலான கோலங்கள் என்கிற நெடுந்தொடரை இயக்கி இருந்தார்.
aadhi gunasekaran
எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு அதில் நடிக்கும் நடிகர்களும், விறுவிறுப்பான திரைக்கதையும் தான் காரணம். குறிப்பாக இந்த சீரியல் வைரல் ஹிட் அடித்ததற்கு அதில் ஆதி குணசேகரனாக மாஸ் காட்டி வந்த மாரிமுத்து தான் முக்கிய காரணம். அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவில் டிரெண்டானதோடு, மீம் டெம்பிளேட்டுகளாகவும் மாறியது. குறிப்பாக அவர் சொல்லும் யம்மா ஏய் என்கிற வசனம் வேறலெவலில் ஹிட்டானது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vela ramamoorthy as new aadhi gunasekaran
இந்த சீரியலின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன மாரிமுத்து, கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் மறைவு சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரின் இந்த எதிர்பாரா மரணத்துக்கு பின் அவர் நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் அடுத்து யார் நடிக்க போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. அந்த சீரியலின் இயக்குனர் கூட அந்த கேரக்டரை அவ்வளவு சீக்கிரம் வேறு யாராலும் செய்ய முடியாது என்று கூறி இருந்தார்.
vela ramamoorthy
இதனால் சில வாரங்கள் கதையின் திரைக்கதையில் மாற்றம் செய்து ஒளிபரப்பி வந்தனர். அது செட் ஆகாததால் வேறு வழியின்றி ஆதி குணசேகரனாக நடிக்க ஆள் தேர்வில் களமிறங்கினர். அவர்களுக்கு முதல் சாய்ஸாக இருந்தது எழுத்தாளர் வேல ராமமூர்த்தி தான். அவர் கச்சிதமாக இருப்பார் என்று ரசிகர்களும் கூறி வந்த நிலையில், தான் பிசியாக இருப்பதால் தற்போது கால்ஷீட் கொடுக்க வாய்ப்பில்லை என சொல்லிவிட்டார் வேல ராமமூர்த்தி.
Vela ramamoorthy salary
இதையடுத்து மற்ற சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எதுவும் திருப்தி அளிக்காததால் வேல ராமமூர்த்தியையே ஒரு வழியாக கமிட் செய்துள்ளனர். இன்றைய எபிசோடில் செம்ம மாஸாக எண்ட்ரி கொடுக்கிறார் வேல ராமமூர்த்தி. சினிமாவில் பிசியாக இருந்த இவரை பெரும் தொகை சம்பளமாக கொடுத்து தூக்கி வந்துள்ளது எதிர்நீச்சல் குழு. அதன்படி இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் சம்பளமாம். இதற்கு முன்னர் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து வாங்கிய சம்பளத்தை விட இது இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...Ethirneechal: இதோ வந்துட்டாருல்ல!! ஏய்...அதிரடியாக என்ட்ரி கொடுத்த புதிய ஆதி குணசேகரன்! செம்ம மாஸ் ப்ரோமோ!