இங்கிலாந்து வீரர்களை நம்பி ஏமாந்த அணிகள் என்னென்ன? பிளே ஆஃப் சுற்றுக்கு முன் தாயகம் திரும்ப காரணம்?
டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் தொடரிலிருந்து விளையாடிக் கொண்டிருந்த இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
England T20 World Cup Squad 2024
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாள், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், கனடா, உகாண்டா, பப்புவா நியூ கினியா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
England T20 World Cup Squad 2024
இந்த 20 அணிகளும் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த ஏப்ரல் 30 அம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரிஷப் பண்ட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிவம் துபே, அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.
England T20 World Cup Squad 2024
மேலும், ரிசர்வ் பிளேயர்ஸாக ரிங்கு சிங், சுப்மன் கில், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் ஏதேனும் மாற்றம் செய்ய நேர்ந்தால் மே 25 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5ஆம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா விளையாடும் குரூப் சுற்று போட்டிகள் அமெரிக்காவிலேயே நடத்தப்பட இருக்கிறது.
England T20 World Cup Squad 2024
அடுத்தடுத்து டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாள், ஓமன், கனடா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, உகாண்டா, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, வங்கதேசம், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் தங்களது வீரர்களை அறிவித்தது.
England T20 World Cup Squad 2024
இங்கிலாந்து அணியில்,
ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி ஃப்ரூக், சாம் கரண், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், பிலிப் சால்ட், ரீஸ் டாப்ளே, மார்க் வுட் ஆகியோர் இடம் பெற்றனர்.
Liam Livingstone
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இதில், ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும், மொயீன் அலி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும், ரீஸ் டாப்ளே, வில் ஜாக்ஸ் ஆகியோர் ஆர்சிபி அணியிலும் இடம் பெற்று விளையாடி வந்தனர்.
Liam Livingstone
இன்னும் 2 வாரங்களில் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் வார்ம் அப் பயிற்சி மேற்கொள்ள நிலையில் இங்கிலாந்து வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக தாயகம் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதில் ஜோஸ் பட்லர் நேற்று புறப்பட்டார். இதே போன்று வில் ஜாக்ஸ், ரீஸ் டாப்ளே ஆகியோரும் நேற்று புறப்பட்டனர். பிலிப் சால்ட் இன்று புறப்பட்டார்.
England T20 World Cup Squad 2024
இவர்களைத் தொடர்ந்து மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரண் ஆகியோர் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் இந்த வாரம் தாயகம் புறப்பட்டுச் செல்ல இருக்கின்றனர். இங்கிலாந்து தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 4 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பர்படோஸில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.