- Home
- Gallery
- இங்கிலாந்துக்கு வாழ்வு கொடுத்த வருண பகவான் – DLS முறையில் வெற்றியோடு 2ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!
இங்கிலாந்துக்கு வாழ்வு கொடுத்த வருண பகவான் – DLS முறையில் வெற்றியோடு 2ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!
நமீபியா அணிக்கு எதிராக நடைபெற்ற 34ஆவது போட்டியில் இங்கிலாந்து டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ENG vs NAM, T20 World Cup 2024
டி20 உலகக் கோப்பை 2024 தொடரானது பரபரப்பான கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பலம வாய்ந்த அணிகளான பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.
NAM vs ENG, T20 World Cup 2024
நேற்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான 33ஆவது போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இரவு 10.30 மணிக்கு ஆண்டிகுவாவில் நடைபெற இருந்த இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழையின் காரணமாக ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ENG vs NAM, T20 World Cup 2024
ஆனால், போட்டி டாஸ் போடுவதற்கு முன்னதாகவே மழை பெய்தது. அதன் பிறகு மழை நின்ற பிறகு டாஸ் போடப்பட்டது. இதில் நமீபியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. மேலும், போட்டியானது 10 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் விளையாடிய இங்கிலாந்து 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்தது.
England vs Namibia
பின்னர் நமீபியா அணிக்கு டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நமீபியா நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ENG vs NAM, T20 World Cup 2024
இதன் மூலமாக இங்கிலாந்து 5 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது. ஸ்காட்லாந்து 2 வெற்றி, ஒரு போட்டி டிரா உடன் 5 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக, டி20 உலகக் கோப்பை தொடரில் பி பிரிவில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் இருந்தது.
ENG vs NAM, T20 World Cup 2024
2ஆவது இடத்தில் ஸ்காட்லாந்து இருந்தது. ஆனால், நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் மட்டுமே 2ஆவது இடத்திற்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது. ஒருவேளை மழையின் காரணமாக போட்டியானது ரத்து செய்யப்பட்டிருந்தால் ஸ்காட்லாந்து 2ஆவது இடத்திலேயே இருந்திருக்கும். இங்கிலாந்து 3ஆவது இடத்திலேயே இருந்திருக்கும்.
T20 World Cup 2024
ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. டாஸ் போடுவதற்கு முன்னதாக மழை பெய்த நிலையில் அதன் பிறகு மழை நின்று போட்டி நடத்தப்பட்டது. இதில், இங்கிலாந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது.
T20 World Cup 2024
எனினும், சூப்பர் 8 சுற்றுக்கு இங்கிலாந்து செல்ல வேண்டுமானால், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில் ஸ்காட்லாந்து தோற்க வேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால் இங்கிலாந்து சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறும்.