VIJAY : விஜய்யின் கட்சி கொடியில் யானை சின்னம் நீக்கப்படுமா.? தேர்தல் ஆணைய விதிகள் கூறுவது என்ன.?
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் கட்சி கொடியில் யானை சின்னம் இருப்பதால் மக்களிடையே குழப்பம் ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கும் என்பது பார்க்கத்தக்கது.
TVK Vijay
அரசியலில் விஜய்
தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு போட்டியாக தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார் நடிகர் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறார். முன்னதாக தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்த விஜய், தற்போது கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டுள்ளார். இந்த கொடியானது அடர்சிவப்பு, மஞ்சள் நிற பின்னணியில் 2 போர் யானைகள், வாகை மலர் ஆகியவை அக்கட்சி கொடியில் இடம்பெற்றுள்ளது.
பாஜகவுடன் சமரசம் செய்து கொண்ட ஸ்டாலின்.! நிதியை பெற மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்.? எடப்பாடி
விஜய் கட்சி கொடி சர்ச்சை
தவெக தலைவர் விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய அடுத்த நிமிடமே பரபரப்பை தொற்றிக்கொண்டது. குறிப்பாக விஜய் கட்சி கொடி நிறத்தை மற்ற நாட்டு கொடியோடு இணைத்து செய்திகள் பரவியது. கொடியில் இருப்பது வாகை மலர் இல்லை, தூங்கு மூஞ்சி மலர் என கூறப்பட்டது. இது மட்டுமில்லாமல் கேரள அரசு முத்திரை இரட்டை யானை எனவும், பெவிகால் விளம்பரம் என நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர்.
பகுஜன் சமாஜ் எதிர்ப்பு
அடுத்ததாக விஜய்க்கு ஷாக் கொடுக்கும் வகையில் தேசிய கட்சியே விஜய்யின் கொடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியானது தங்கள் கட்சி கொடியில் யானை சின்னம் இருக்கும் நிலையில் நடிகர் விஜய்யும் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
யானை சின்னத்திற்கு எதிர்ப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி கூறுகையில், பகுஜன் சமாஜ் கொடியைப்போல விஜயின் கட்சிக் கொடியிலும் யானை சின்னம் இருப்பதால் மக்களிடைய தேவையற்ற குழப்பம் ஏற்படும் என்றும் , நடிகர் விஜய் அரசியல் நாகரிகமின்றி , சட்ட விரோதமாக யானை சின்னத்தை பயன்படுத்தியிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்
தேர்தல் ஆணையத்தில் புகார்
3 ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருப்பது போல் ஆளாளுக்கு யானையைப் பயன்படுத்த கூடாது. ஃபெவிக்கால் , முத்தூத் பைனான்ஸ் நிறுவன விளம்பரங்களில் யானை இருப்பது பிரச்சனை இல்லை , ஆனால் இன்னொரு அரசியல் கட்சி எந்த வடிவிலும் யானையை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தார். திரைப்படங்களைப் போல் அரசியலில் டூப் போட முடியாது. விஜய் தனது கட்சிக் கொடியில் யானை சின்னத்தை நீக்காவிட்டால் மிகப்பெரும் சட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
தேர்தல் ஆணைய விதி கூறுவதென்ன.?
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தனது கொடியில் பயன்படுத்துவது பற்றி தேர்தல் ஆணைய அதிகாரிள் கூறும்போது. ஒரு கட்சியின் சின்னத்தை மற்ற கட்சி பயன்படுத்தக் கூடாது என்ற மைய விதி உள்ளது. ஆனால் ஒரு கட்சியின் சின்னத்தை மற்றொரு கட்சி தனது கொடியில் பயன்படுத்துவதை தடுக்கும் விதத்தில் நேரடியாக விதிகள் எதுவும் இல்லை. எனவே இந்திய தேர்தல் ஆணையம் தான் புதிய முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
யானை சின்னம் நீக்கப்படுமா.?
மேலும் விஜய்யின் கட்சியின் கொடி சின்னம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியும், தமிழக வெற்றிக்கழகமும் சட்ட ரீதியாக நீதிமன்றமும் செல்ல வாய்ப்புள்ளது. அதன் பிறகு புதிய விதி உருவாக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளனர். எனவே நடிகர் விஜய் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானையின் சின்னத்தை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிடுமா.? அல்லது யானைக்கு ஓகே சொல்லுமா என்பதை வெகு விரைவில் தெரிந்துவிடும்.
தளபதியின் த.வெ.க மாநாடு தேதி குறிச்சாச்சு! எங்கு - எப்போது? விஜய் போட்ட உத்தரவால் பரபரக்கும் பணிகள்!