MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தீவிர பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுகிறீர்களா? 32 நோய்களுக்கு ஆளாகலாம்.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை..

தீவிர பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுகிறீர்களா? 32 நோய்களுக்கு ஆளாகலாம்.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை..

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ஆய்வாளர்கள் குழு, அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்வது ஏற்படும் ஆபத்து குறித்து ஆய்வு செய்தனர்.

2 Min read
Author : Ramya s
Published : Mar 02 2024, 02:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

உட்கார்ந்த வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கங்கள் காரணமாக பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கேஜ்டு உணவுகளை தவிர்க்குமாறு மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், சர்க்கரை தானியங்கள் மற்றும் ரெடிமேட் உணவு வகைகள் ஆகியவை அடங்கும். இந்த உணவு பொருட்களில்  அதிக சர்க்கரை, கொழுப்பு மற்றும்/அல்லது உப்பு உள்ளடக்கம் அதிகமாக உள்ளது.

27

இந்த நிலையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ஆய்வாளர்கள் குழு, அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்வது ஏற்படும் ஆபத்து குறித்து ஆய்வு செய்தனர்.

37

அதில் இந்த உணவுகளை உட்கொள்வதால் இதய நோய் தொடர்பான இறப்புவிகதம் 50% அதிகமாக இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது, இது 48-53 சதவீதம் கவலை மற்றும் பொதுவான மனநல கோளாறுகள் ஏற்படும் அதிக  ஆபத்து உள்ளதாகவும், டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து 12 சதவீதம் அதிகம் என்று கண்டறிந்துள்ளனர்..

47
Why pregnant women should not eat fast food during pregnancy

Why pregnant women should not eat fast food during pregnancy

BMJ ஆல் வெளியிடப்பட்ட, இந்த ஆய்வு முடிவுகள், கிட்டத்தட்ட 10 மில்லியன் பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 14 ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து 45 தனித்தனியான தொகுக்கப்பட்ட மெட்டா பகுப்பாய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. 

57

தீவிர பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வதால் 21 சதவிகிதம் இறப்பு விகிதத்துடன் தொடர்புடையது, இதய நோய் தொடர்பான இறப்பு, உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய் மற்றும் 40-66 சதவிகிதம் அதிகம் ஆபத்து ஆகியவற்றுடன் தொடர்புடைய ஆதாரங்களையும் குழு கண்டறிந்துள்ளது. அதே போல் தூக்க பிரச்சனைகள், மற்றும் மனச்சோர்வு ஏற்படும் அபாயம் 22 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

67
ജങ്ക് ഫുഡ്

ജങ്ക് ഫുഡ്

"இந்த கண்டுபிடிப்புகள், மேம்பட்ட மக்கள் நலனுக்காக தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வை குறைக்க முயலும் அவசர ஆராய்ச்சி என்றுஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகத்தின் இணை ஆராய்ச்சி சக மெலிசா எம் லேன் கூறினார்.

 

77

"இதில் முன்பக்க லேபிள்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் அல்லது அருகாமையில் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் விற்பனையைத் தடை செய்தல், மற்றும் பதப்படுத்தப்படாத அல்லது குறைந்தபட்சமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆகியவை அடங்கும்” என்று தெரிவித்தார்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
உணவு
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved