- Home
- Gallery
- சமைக்கும்போது கையில் சூடான எண்ணெய் விழுந்து விட்டதா..? மருந்துகள் இல்லாமல் சரி செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ..
சமைக்கும்போது கையில் சூடான எண்ணெய் விழுந்து விட்டதா..? மருந்துகள் இல்லாமல் சரி செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ..
சமைக்கும்போது கையில் சூடான எண்ணெய் விழுந்தால் மருந்துகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அவற்றை குணமாக்கலாம். அவை..

சில சமயங்களில் நாம் சமைக்கும்போது கையில் எண்ணெய்ப்பட்டு காயம் ஏற்படும். இதனால் வலி ஏற்படுவது மட்டுமின்றி, காயங்களும் ஏற்படும். இதற்கு மருந்துகள் ஏதுமின்றி சில விஷயங்களை மட்டும் செய்தால் போதும், சுலபமாக குறைக்கலாம். அவை..
கையில் சூடான எண்ணெய் விழுந்தால் உடனே கொப்புளங்கள் வரும். அப்படி நடக்காமல் இருக்க உடனே, கையை குளிர்ந்த நீரில் வைக்கவும். இப்படி செய்தால் கொப்புளங்கள் வராமல் தடுக்கப்படும்.
டீ பேக்: டீ பேக்குகளில் டானிக் அமிலம் உள்ளது. மேலும், இது வீக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. எனவே, கையில் தீக்காயம் ஏற்பட்டால் ஃப்ரீசரில் சிறிது நேரம் டீ பேக்குகளை வைத்து, பிறகு அதை தீக்காயங்கள் மீது வாய்த்தால் வலி மற்றும் எரியும் உணர்வு குறையும் மற்றும் கொப்புளங்கள் வருவது தடுக்கப்படும்.
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு மற்றும் அவற்றின் தோல்களில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன அவை வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. எனவே, தீக்காயம் ஏற்பட்டால் ஒரு மெல்லிய உருளைக்கிழங்கு துண்டை பாதிக்கப்பட்ட இடத்தின் மீது வைக்கவும்.
இதையும் படிங்க: கருப்பாக இருக்கும் கடாயை புதிது போல் மாற்ற வேண்டுமா? அப்ப இதை ட்ரை பண்ணி பாருங்க..
இல்லையெனில், உருளைக்கிழங்கை அரைத்து அந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். மேலும் தீக்காயங்கள் ஆறிய பிறகு, பிரிட்ஜில் வைத்த உருளைக்கிழங்கு தோலை அந்த இடத்தில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: கருகிப் போன பாத்திரத்தை ஈசியாக சுத்தம் செய்ய சிம்பிளான டிப்ஸ்!!
வாழைப்பழத்தால்: வாழைப்பழத் தோலும் தீக்காயங்களை அகற்றும் இதற்கு வாழைப்பழத் தோலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் வைத்து சிறிது நேரம் கழித்து ஆகும் இதிலிருந்து நிச்சயம் நல்ல நிவாரணம் பெறுவீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D