- Home
- Gallery
- தூத்துக்குடியில் பயங்கரம்! நள்ளிரவில் இரண்டு பேர் ரத்த வெள்ளத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை! நடந்தது என்ன?
தூத்துக்குடியில் பயங்கரம்! நள்ளிரவில் இரண்டு பேர் ரத்த வெள்ளத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை! நடந்தது என்ன?
தூத்துக்குடி அருகே மீன் கடை உரிமையாளர் வெள்ளத்துரை மற்றும் அவரது நண்பர் கோபால்சாமி ஆகியோர் நள்ளிரவில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fishmonger
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் வெள்ளத்துரை (50). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன் கடை நடத்தி வருகிறார். வழக்கமாக இரவு கடையை மூடிய பின் கடையிலேயே படுத்து உறங்குவதை வெள்ளத்துரை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று இரவும் வழக்கம் போல வெள்ளத்துரை தனது கடையில் தூங்கிக்கொண்டிருந்தார்.
Thookudurai Double Murder
அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ளத்துரையை சரமாரியாக வெட்டியுள்ளனர். தடுக்க வந்த அவரது நண்பர் கோபால்சாமியும் வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
இதையும் படிங்க: என் நம்பரையே பிளாக் செய்றியா.. தூங்கிக் கொண்டிருந்த கள்ளக்காதலி.. ஜன்னல் வழியாக கள்ளக்காதலன் செய்த வேலை!
Police investigation
இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைகள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.