- Home
- Gallery
- Navaratri: மறந்து கூட நவராத்திரி விரதத்தின் போது இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! அம்மன் கோபத்திற்கு ஆளாகக்கூடும்!
Navaratri: மறந்து கூட நவராத்திரி விரதத்தின் போது இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! அம்மன் கோபத்திற்கு ஆளாகக்கூடும்!
நவராத்திரி விரதம் எடுக்கும் போது, இந்த தவறுகளை செய்ய கூடாது என நம் முன்னோர்கள் கூறியுள்ள சில விஷயங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நவராத்திரி கொண்டாட்டம் அனுசரிக்கப்படும் ஒவ்வொரு நாளும், பெண்கள் அம்மனை வழிபட உகர்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த 9 நாட்களும், வீட்டில் கொலு வைத்து, சக்தி ஸ்வரூபமான அம்மனின் துதியை பாடி, அவளின் அருள் கிடைக்க வேண்டிக்கொள்கிறார்கள். எனவே தான் இந்த நவராத்திரி பண்டிகை பெண்களுக்கே உரியதாக பார்க்கப்படுகிறது.

நவராத்திரியை நாம் தெய்வங்களை நினைத்து, 9 நாளும் வழிபட்டு வருவதன் மூலம்... அம்பாளின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். அதே போல் செல்வம், வலம், செழுமை, ஆயுள், வலிமை போன்ற அனைத்தையும் அம்மன் அள்ளிக்கொடுப்பாள் என நம்பப்படுகிறது. திருமணம் ஆன பெண்கள் நவராத்திரி விரதம் கடைபிடிப்பதால், அவர்களின் மாங்கல்ய பலம் கூடும், திருமணம் ஆகாத கன்னி பெண்கள் நவராத்திரி விரதம் இருப்பதால் அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை கிடைக்கும்.
Vanitha Son in Leo: 'லியோ' படத்தில் பிக்பாஸ் வனிதாவின் மகன்..! இதை நோட் பண்ணுனீங்களா?
பெண்களால் மிகவும் பயபக்தியோடு, நவராத்திரி விருத்தம் கடைபிடிக்க பட்டாலும்... மறந்து கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள். 'உங்கள் வீட்டில் உள்ள ஆண்கள், குழந்தைகள் என யாருக்கும் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ அல்லது நகம் வெட்டவோ இந்த 9 நாட்களும் அனுமதிக்காதீர்கள். இது துர்க்கை அம்மனின் கோவத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
வீட்டை தினமும், துடைத்து சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். உங்கள் இல்லம் மட்டும் அல்ல இந்த 9 நாட்கள் உங்கள் உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். யார் மீதும், போட்டி, பொறாமை, கோவம், பழி உணர்ச்சி போன்ற செயல்களை கையாளுவதை தவிர்க்க வேண்டும். உங்களின் கோப தானங்களை அடக்கி அந்த மாதா தேவியை நினைக்க வேண்டும் .
Comedy Actor Arrested: நடைப்பயிற்சியின் போது ஏற்பட்ட தகராறு..! காமெடி நடிகர் அதிரடி கைது..!
அதே போல் நவராத்திரி பண்டிகை காலத்தில் வீட்டுக்கதவை பூட்டு போட்டு விட்டு வெளியே போகக்கூடாது. யாராவது ஒருவர் வீட்டில் இருக்க வேண்டும். உங்கள் வீட்டின் வாசல் கதவு எப்போதும் திறந்திருக்க வேண்டும். பகல் நேரத்தில் பெண்கள் தூங்க கூடாது.
விரத சமயத்தில், வழக்கத்தை விட நீங்கள் ஒரு வித சோர்வை உணர நேரிடும். எனவே அந்த சமயத்தில் ஹெவியான உணவு வகைகளை எடுத்து கொள்ளாமல், அதிகப்படியான காய்கறிகள், பழங்கள், பயறு வகைகளை சாப்பிடுங்கள். முடிந்தால் ஒருநாளைக்கு 2 ஜூஸ் குடிப்பது உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
மேலும் நவராத்திரி விரதத்தில் அம்மனுக்கு உகர்த்ததாக பார்க்கப்படும், ராஜ கனியான எலுமிச்சை பழத்தை வெட்ட கூடாது. இதுபோன்ற சிலவற்றை நீங்கள் நவராத்திரி நாளில் கடைபிடிக்க தவறும் பட்சத்தில் செய்வத்தின் கோவத்திற்கு ஆளாக கூடும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D