ராயன் படத்தின் சோசியல் மீடியா ஹைப்.. ஒரே நொடியில் தட்டிசென்றாரா ரஜினி?
Super Star Rajinikanth : இன்று பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷின் "ராயன்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது.

Raayan
பிரபல நடிகர் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் "ராயன்". இன்று ஜூலை 26ம் தேதி வெள்ளிக்கிழமை உலகெங்கிலும் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
Dhanush
கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் இரண்டாம் நாயகனாக இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் திகழ்கிறார் என்றும், மீண்டும் இயக்குனராக தனுஷ் தன்னை நிரூபித்து இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதிர்வரும் வார இறுதியில் இன்னும் பெரிய அளவில் இந்த திரைப்படம் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Rajinikanth
இப்படி "ராயன்" திரைப்பட ரிலீஸை அனைவரும் கொண்டாடி, சோஷியல் மீடியாவே ராயன் பெயரை தொடர்ந்து சொல்லி வந்த சூழ்நிலையில், ஒரு நொடியில் அதை தட்டிச் செல்லும் வகையில் சூப்பர் ஸ்டாரின் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது என்கிறார்கள் இணையவாசிகள்..
Rajini
தனது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் மகன், பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே பள்ளிக்கு நேரில் சென்று தன் பேரனை விட்டு வந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
'ராயன்' படத்திற்கு இதுவரை வாங்கிடாத மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற தனுஷ்! இத்தனை கோடியா?