- Home
- Gallery
- நீ யாரு மருத்துவரா? இதோட நிறுத்திக்கோ... சமந்தாவை தொடர்ந்து மருத்துவரிடம் வாங்கி கட்டிக்கொண்ட நயன்தாரா!
நீ யாரு மருத்துவரா? இதோட நிறுத்திக்கோ... சமந்தாவை தொடர்ந்து மருத்துவரிடம் வாங்கி கட்டிக்கொண்ட நயன்தாரா!
நடிகை சமந்தா அண்மையில் தவறான மருத்துவ முறை பற்றி கூடி, மருத்துவர் Cyriac Abby Philips என்பவரிடம் வாங்கி கட்டிக்கொண்ட நிலையில், அவரை தொடர்ந்து நயன்தாரா வாயை விட்டு சிக்கியுள்ளார்.

Actress Nayanthara
நடிகை சமந்தா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடி கட்டிய நீர் ஆகியவற்றை நெபுலைஸர் செய்வது சிறந்த பலன் தரும் என்றும், இதை தான் மருத்துவ பரிந்துரையின் பெயரில் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இந்த பதிவு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிலர் பிரபலங்கள் உட்பட மருத்துவர்கள் பலர் இதற்க்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
actress samantha
குறிப்பாக மருத்துவர் Cyriac Abby Philips, சமந்தா பலரை தவறான சிகிச்சைக்கு தூண்டுவதாகவும் அவரை கைது செய்யவேண்டும் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து சமந்தா விளக்கம் ஒன்றையும் கொடுக்க அந்த பிரச்சனை ஓய்ந்தது.
9 வயதில்... பல லட்சம் மதிப்புள்ள கார் வாங்கிய 'அரண்மனை 4' பட குழந்தை நட்சத்திரம்! குவியும் வாழ்த்து!
actress nayanthara hibiscus juice
இவரை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா... வாண்டடாக வாயை விட்டு மீண்டும் மருத்துவர் Cyriac Abby Philips இடம் சிக்கியுள்ளார். அதாவது சினிமா நடிகை நயன்தாரா, நடிகை சமந்தாவை விட இரண்டு மடங்கு அதாவது 8.7 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை, செம்பருத்தி தேநீர் என்ற சப்ளிமெண்ட் மூலம் தவறாக வழிநடத்தியுள்ளார்.
Doctor Slam Nayanthara
அவள் செம்பருத்தி டீயை அருந்தினால் சுவையாக இருக்கும் என்பது சரிதான், ஆனால் நடிகை நயன்தாரா சொல்வது போல் செம்பருத்தி டீ குடித்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் என்றும் என்பது எந்த விதத்திலும் நிரூபிக்கப்படாதது என தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ள இவர், ‘செம்பருத்தி டீ குடிப்பது உடலுக்கு நல்லது என்று மட்டும்ஸ் சொல்வதோடு நிறுத்தி கொள்ளுங்கள், சர்க்கரை நோயை குணப்படுத்தும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் என்று கூறுவதற்கு நயன்தாரா யார்? அவர் மருத்துவரா? என்று கொந்தளித்து போட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'குக் வித் கோமாளி' சீசன் 5 இந்த வார செஃப் ஆப் தி வீக் மற்றும் எலிமினேட் ஆன பிரபலம் யார் தெரியுமா?