90களில் விஜய், அஜித்துடன் போட்டி போட்டு நடித்த இந்த நடிகைகளை எல்லாம் ஞாபகம் இருக்கா?
விஜய் அஜித்தின் ரீல் ஜோடியாகவும் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடிகைகளாகவும் வலம் வந்த நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Vijay Ajith
இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித் தான். இந்த இரு நடிகர்களுக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், விஜய்யை தளபதி என்றும், அஜித்தை தல என்றும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் விஜய் அஜித் இருவரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
Vijay Ajith
தற்போது உச்ச நடிகர்களாகவும் கோலோச்சி வருகின்றனர். 90களில் இந்த இருவரும் திரையில் அறிமுகமான காலத்தில் இருந்து தற்போது வரை விஜய் அஜித்தின் ரீல் ஜோடியாகவும் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடிகைகளாகவும் வலம் வந்த நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Sanghavi Vijay
சங்கவி :
90களில் தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சங்கவி. அஜித்தின் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமான சங்கவி, விஜய்யுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்தார். அதன்படி ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூ மாப்பிளை உள்ளிட்ட பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார். மேலும் தனது கெரியரின் ஆரம்பத்தில் விஜய்யுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
swathi Ajith
சுவாதி :
90களில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சுவாதி. விஜய்யின் தேவா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர் அஜித்தின் வான்மதி படத்தில் நடித்திருந்தார். வான்மதி படத்திற்கு பின் தனது படிப்பை தொடர சென்ற சுவாதி படிப்புக்காக பல பட வாய்ப்புகளை நிராகரித்தார். தொடர்ந்து விஜய்யுடன் செல்வா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் கடைசியாக அமீரின் யோகி படத்தில் நடித்திருந்தார். பின்னர் திருமணமாகி செட்டிலாகிவிட்டார்.
Vijay devayani
தேவயானி :
தொட்டா சிணுங்கி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான தேவயானி அஜித்தின் காதல் கோட்டை படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் விஜய் உடன் நினைத்தேன் வந்தாய், ப்ரெண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த அவர் திருமணத்திற்கு பின் சீரியல்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
Vijay Rambha
ரம்பா :
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா அஜித்துடன் ராசி படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து விஜய் உடன் நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சாரக் கண்ணா ஆகிய படங்களில் நடித்தார். இதை தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் திருமணமாகி கனடாவில் செட்டில் ஆனார்.
Simran vijay
சிம்ரன் :
விஐபி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சிம்ரன் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார். விஜய் உடன் ஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே உள்ளிட்ட படங்களில் சிம்ரன் நடித்தார். அதே போல் அஜித்துடன் அவள் வருவாளா, வாலி, உன்னைக்கொடு என்னை தருவேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.