- Home
- Gallery
- அண்டர் 19 உலகக் கோப்பையில் கேஎல் ராகுல், ஜெயதேவ் உனத்கட் உடன் விளையாடிய சவுரப் நெட்ரவால்கர்!
அண்டர் 19 உலகக் கோப்பையில் கேஎல் ராகுல், ஜெயதேவ் உனத்கட் உடன் விளையாடிய சவுரப் நெட்ரவால்கர்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரை சிறப்பாக வீசி அமெரிக்கா அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த சவுரப் நெட்ரவால்கர் அண்டர் 19 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saurabh Netravalkar
அமெரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 11ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய அமெரிக்கா கேப்டன் மோனாங்க் படேலின் அதிரடியால் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து போட்டியை சமன் செய்தது.
Saurabh Netravalkar
இதைத் தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 18 ரன்கள் எடுத்தது. பின்னர் பாகிஸ்தான் களமிறங்கி 6 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
Saurabh Netravalkar
இந்த போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவுரப் நெட்ராவால்கர் சிறப்பாக பந்து வீசி அமெரிக்காவின் வெற்றிக்கு வித்திட்டார். கடந்த 1991 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்து வளர்ந்த நெட்ராவால்கர், 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். தற்போது இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் கேஎல் ராகுல், ஜெயதேவ் உனத்கட், மாயங்க் அகர்வால், சந்தீப் சர்மா ஆகியோருடன் இணைந்து விளையாடியிருக்கிறார்.
Saurabh Netravalkar
சவுரப் நெட்ராவால்கர் கார்னல் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா வந்த நெட்ராவால்கர், அமெரிக்கா அணியில் இடம் பெற்று கிரிக்கெட் விளையாடி வருகிறார். நெட்ராவால்கர் அண்டர் 19 உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் இடம் பெற்று 9 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.