என்னது இந்த பாடல்களை பாடியது மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரனா? 90ஸ் கிட்ஸ்.. நோட் பண்ணுங்கப்பா!
தமிழ் திரையுலகின் இசை வரலாற்றை அய்யா மலேசியா வாசுதேவனின் பெயர் இல்லாமல் எழுதுவது என்பது மிகக்கடினம். அவருடைய குரலில் உருவான பாடல்களின் தாக்கம் இன்றளவும் உள்ளது என்றால் அது நிச்சயம் மிகையல்ல. அந்த மாபெரும் பாடகர் மற்றும் நடிகரின் மகன் தான் யுகேந்திரன்.
Autograph
நடிகரும், இசையமைப்பாளரும், பாடகருமான யுகேந்திரன் அவர்கள் தனது பத்தாவது வயதில் தன்னுடைய மிருதங்க அரங்கேற்றத்தை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயது முதலே தனது தந்தையை போல இவரும் பாடகராக வேண்டும் என்று எண்ணியவர்.
கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான தல அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், பல சிறந்த பாடல்களை பாடியுள்ளார். இது யுகேந்திரன் பாடிய பாடல்களா என்று நாமே வியக்கும் வண்ணம் அந்த பாடல்கள் அமைந்திருக்கும். குறிப்பாக சேரனின் ஆட்டோகிராப் படத்தில் வெளியான "கிழக்கே பார்த்தேன் விடியலாய் வந்தாய் அன்புத் தோழி" என்கின்ற பாடல் இவர் குரலில் உருவான பாடல் தான்.
சந்திரமுகி கதாபாத்திரத்தில் கவர்ச்சியாக இருக்கிறீர்கள்..! கங்கனாவுக்கு வாழ்த்து கூறிய ஜோதிகா..!
Saamy
அதேபோல விக்ரமின் சாமி திரைப்படத்தில் வரும் "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" என்ற பாடலை ஸ்ரீலேகா பார்த்தசாரதியுடன் இணைந்து பாடியது யுகேந்திரன் தான்.
Thozha Thozha
இன்றளவும் 90ஸ் கிட்ஸ்களால் அதிகம் ரசிக்கப்படும் பாண்டவர் பூமி படத்தில் வரும், தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும் என்ற பாடலும் யுகேந்திரன் அவர்களுடைய குரலில் ஒலித்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
Lesa Lesa
திரிஷாவிற்கு இன்றளவும் சூப்பர் ஹிட் பாடலாக திகழ்வது லேசா லேசா படத்தில் வந்த "முதல் முதலாய்" என்கின்ற பாடல் என்றால் அது சற்றும் மிகையல்ல. பாடலை பிரபல பாடகர் திப்பு அவர்களுடன் இணைந்து பாடியது பாடகர் யுகேந்திரன் தான். இது மட்டும் அல்லாமல் இன்னும் ஓ மரியா.. ஓ மரியா.., பார்த்தேன் ரசித்தேன் படத்தில் வரும் பாடல் என்று பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தியுள்ளார் யுகேந்திரன்.
6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதா? அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவப் பரிசோதனை