மனைவிகளே.. கணவரை நிம்மதியா இருக்க விடுங்கம்மா.. இந்த மாதிரி நடந்துக்காதீங்க..!
Women's Annoying Habits : கணவன் மனைவி உறவில் மனைவியின் சில நடத்தைகள் கணவனுக்கு பிடிக்காது. அது என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
பெண்கள் சில நேரங்களில் சிறிய விஷயங்களை கூட பெரியதாக எடுத்துக் கொள்வார்கள். இது பொதுவானது. இது அடிக்கடி நடந்தால் ஆண்கள் விரக்தி அடைக்கிறார்கள். அந்த வகையில் மனைவியின் சில நடத்தை கணவனை எரிச்சலூட்டுகிறது.
ஒவ்வொரு கணவனும் தனது மனைவி சில விஷயங்களை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று விரும்புகிறான். ஆனால் பெண்கள் அப்படி இருப்பதை மிகவும் சிரமமாக உணர்கிறார்கள். இதனால் இருவருக்கும் இடையே சண்டைகள் ஏற்படுகிறது. எனவே, மனைவியிடம் கடனுக்கு பிடிக்காத சில விஷயங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
அதிகப்படியான யோசனை: சில மனைவிகள் தங்கள் மனதிற்குள் பலவற்றை நினைத்து அவர்கள் கணவரை குற்றம் சாட்டுகிறார்கள். ஒவ்வொரு முறையும், கணவர் சரியானவர்கள் என்றாலும், அது அவரது மனைவி பார்வையில் குற்றமாக தெரிகிறது. இதன் காரணமாக கணவனுக்கு நிச்சயம் எரிச்சல் வர ஆரம்பிக்கும். மறுபுறம், கணவன் தற்செயலாக ஏதாவது மறந்து விட்டால் கூட மனைவி உடனடியாக அவரை குறை கூற தொடங்குகிறாள்.
இதையும் படிங்க: கசந்து போன உங்க திருமண வாழ்க்கையில் மறுபடியும் காதல் பொங்கணுமா? இதை மட்டும் செய்யுங்க போதும்
நகைச்சுவையை சீரியஸாக எடுத்துக் கொள்வது: பொதுவாகவே சில பெண்கள் நகைச்சுவை விரும்புவதில்லை. சொல்ல போனால் அது அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. இதனால், நகைச்சுவையை அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொண்டு கோபம் கொள்கிறார்கள். ஆனால், ஆண்கள் தங்கள் மனைவியும் நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இதையும் படிங்க: பொண்டாட்டி காசுல வாழுறியா? அதிகம் சம்பாதிக்கும் மனைவி.. நண்பர்கள் கிண்டலால் ஆண் செய்த காரியம்!!
அன்பு: சில பெண்கள் தங்கள் கணவர் எல்லார் முன்னிலையிலும் அன்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒருவேளை கணவன் அதன்படி நடக்கவில்லை என்றால் அதை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு சண்டை போட ஆரம்பிக்கிறார்கள். மனைவி இந்த நடத்தியால் கணவன் மனைவி உறவு விரிசல் வரலாம்.