Virat Kohli Anushka Net Worth: கோலி – அனுஷ்கா சர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.1300 கோடி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.
virat kohli and anushka sharma net worth
கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்களில் காதலித்து திருமணம் செய்த கொண்ட பிரபலங்களில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடியும் ஒன்று. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடியை Ideal Couple – சிறந்த ஜோடி என்று சொன்னால் தவறில்லை.
virat kohli and anushka sharma net worth
கடந்த 2013 ஆம் ஆண்டு ஷாம்பு விளம்பரத்தின் மூலமாக இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துள்ளனர். இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். விராட் கோலி விளையாடும் போட்டிகளில் எல்லாம் அனுஷ்கா சர்மா நேரில் வந்து பார்த்து ரசித்துள்ளார்.
virat kohli and anushka sharma net worth
கடந்த 2017 ஆம் ஆண்டு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த ஜனவரி 2021ல் இந்த ஜோடிக்கு வாமிகா என்ற மகள் பிறந்தாள். திருமணத்திற்கு முன்பு காதலித்ததை விட திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர்.
virat kohli and anushka sharma net worth
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஜோடிக்கு அகாய் என்ற மகன் பிறந்தார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த ஜோடியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.1300 கோடி என்றால் உஙகளால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.
virat kohli and anushka sharma net worth
விராட் கோலி சம்பளம்:
விராட் கோலி பிசிசிஐ ஒப்பந்தம் மூலமாக வருடத்திற்கு ரூ.7 கோடி வரையில் வருமானம் பெறுகிறார். இது தவிர ஒருடெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் என்று வருமானம் பெறுகிறார்.
virat kohli and anushka sharma net worth
ஐபிஎல் சம்பளம்:
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணியில் விளையாடி வரும் கோலி ரூ.15 கோடிக்கு அந்த அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
virat kohli and anushka sharma net worth
பிராண்டு ஒப்பந்தம்:
பல பிராண்டுகளின் முகமாக திகழும் விராட் கோலி ஒரு பிராண்ட் ஒப்பந்தத்திற்கு ரூ.7.50 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் வருமானம் பெறுகிறார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் தகவலின்படி இன்ஸ்டாகிராம் பதிவின் மூலமாக ரூ.8.9 கோடியும், எக்ஸ் (டுவிட்டர்) பக்கம் மூலமாக ரூ.2.5 கோடியும் வருமானம் பெறுகிறார்.
பிஸினஸ்:
கிரிக்கெட் மற்றும் பிராண்ட் ஒப்பந்தம் தவிர, ரெஸ்டாரண்ட் மற்றும் ஆடை பிராண்டுகள் ஆகியவற்றின் மூலமாக குறிப்பிடத்தக்க வகையில் வருமானம் ஈட்டி வருகிறார். மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1050 கோடி ஆகும்.
virat kohli and anushka sharma net worth
அனுஷ்கா சர்மாவின் வருமானம்:
டிஎன்ஏ தகவலின் படி ஒவ்வொரு படத்திற்கும் ரூ.7 கோடி வரையில் சம்பளம் பெற்று வருகிறார். இதுதவிர பிராண்ட் ஒப்பந்தம் மூலமாக ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் வருமானம் பெறுகிறார்.
virat kohli and anushka sharma net worth
மேலும், தனது சமூக வலைதள பக்கம் மூலமாகவும் வருமானம் பெறுகிறார். ஆம், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக ரூ.95 லட்சம் வரையில் வருமானம் பெறுகிறார். தனது கணவர் போன்று அனுஷ்கா சர்மாவும் ஸ்டார் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அனுஷ்கா சர்மா ஆடை பிராண்ட் அதனுடைய நவநாகரீக மற்றும் ஃபேஷன் சலுகைகளுக்காக பிரபலமடைந்துள்ளது.
virat kohli and anushka sharma net worth
ஒட்டுமொத்தமாக அனுஷ்கா சர்மாவின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.255 கோடி ஆகும். இதன் மூலமாக கணவன் மனைவியாக இருவரும் இணைந்து விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா வருடத்திற்கு ரூ.1300 கோடி வரையில் வருமானம் ஈட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.