நடிகர் ரஞ்சித்.. இவரோட முதல் மனைவி பிரியானு தெரியும்.. ஆனா இரண்டாவது மனைவி யார் தெரியுமா? அவரும் நடிகை தான்!
சினிமாவிலும் அரசியலிலும் தனது பயணத்தை முடித்துக் கொண்டு, தற்பொழுது சின்ன திரையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் ரஞ்சித். கடந்த 1993 ஆம் ஆண்டு கே. எஸ் ராஜ்குமார் என்பவர் இயக்கத்தில் வெளியான பொன்விலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.
Kollywood Actor Ranjith
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளை தவிர இவர் வேறு மொழிகளில் நடித்ததில்லை, 90களில் துவக்கத்தில் இருந்தே பல முன்னணி நடிகர்களுக்கு ஈடு கொடுத்து இவரும் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தார். குறிப்பாக 2001ம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியான பாண்டவர் பூமி திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
Vivek
அதே போல 2007 ஆம் ஆண்டு செல்வ பாரதியின் இயக்கத்தில் வெளியான பசுபதி கேர் ஆப் ராஜக்காபாளையம் திரைப்படம் இவரை பலரால் ரசிக்க வைத்தது என்றால் அது மிகையல்ல. குறிப்பாக அந்த படத்தில் மறைந்த நடிகர் திரு. விவேக் மற்றும் ரஞ்சித் இடையே வரும் காமெடி காட்சிகள் இன்றளவும் பிரபலம்.
Ranjith and Priya Raman
நடிகர் ரஞ்சித் அவர்கள் பிரபல தமிழ் நடிகை பிரியா ராமன் அவர்களை கடந்த 1999 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சுமார் 15 ஆண்டுகள் கழித்து இருவரும் மனமுவந்து விவாகரத்து பெற்றனர். இந்த சூழலில் தான் அவருக்கு வேறு ஒரு நடிகையுடன் திருமணம் ஆனது, இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் அந்த நடிகையுடன் அவருக்கு இருந்த காதலே பிரியா ராமனை, ரஞ்சித்தை விட்டு பிரிய காரணமாக இருந்தது.
Actress Ragasudha
சரி யார் அந்த நடிகை தெரியுமா, அவர் பெயர்தான் ராகசுதா, பிரபல நடிகை கே. ஆர். விஜயாவின் தங்கையின் மகள் இவர். தமிழிலும் இவரை பல திரைப்படங்களில் நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். இவருக்கும் நடிகர் ரஞ்சித் அவர்களுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணமானது. ஆனால் புது காதல் கசந்த நிலையில் வெகு சீக்கிரம் இந்த திருமணம் விவாகரத்தில் சென்று முடிந்தது.
திருமணமான ஒரே வருடத்தில் ராகசுதாவை பிரிந்தார் நடிகர் ரஞ்சித், இந்நிலையில் சுமார் மூன்று ஆண்டு காலம் தனிமையில் வாழ்ந்து வந்த ரஞ்சித், அதன் பிறகு தனது முதல் மனைவியும் காதலியுமான பிரியா ராமனுடன் மீண்டும் இணைந்து தற்பொழுது வாழ்ந்து வருகிறார்.