MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் பும்ராவின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் பும்ராவின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரித் பும்ராவின் நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.55 கோடி ஆகும்.

3 Min read
Rsiva kumar
Published : Jun 22 2024, 05:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Jasprit Bumrah Net Worth

Jasprit Bumrah Net Worth

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்த ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். முதல் முதலாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதே போன்று, ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

211
Jasprit Bumrah Net Worth

Jasprit Bumrah Net Worth

இதுவரையில் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 159 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதே போன்று, 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 149 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், 66 டி20 போட்டிகளில் விளையாடி 82 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடி வரும் பும்ரா 4 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

311
Jasprit Bumrah Net Worth

Jasprit Bumrah Net Worth

இந்திய அணிக்காக விளையாடி வரும் பும்ராவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.55 கோடி ஆகும். கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் மூலமாக அதிக வருமானம் ஈட்டி வருகிறார். குழந்தைப்பருவம் முதல் போராட்டங்களை சந்தித்து வந்த பும்ரா, இளம் வயதில் தனது தந்தை இழந்துள்ளார். தாயார் அகமதாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

411
Jasprit Bumrah Net Worth

Jasprit Bumrah Net Worth

இளம் வயது முதல் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆசை கொண்ட பும்ரா வாசீம் அக்ரம் மற்றும் வாகர் யூனிஸ் ஆகியோரது பந்து வீச்சைப் பார்ர்த்து வளர்ந்து யார்க்கர் மன்னனாக திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய பும்ரா 20 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய 4ஆவது வீரரானார்.

511
Jasprit Bumrah Salary

Jasprit Bumrah Salary

கடந்த ஜனவரி மாதம் நிலவரப்படி பும்ராவின் நிகர சொத்து மதிப்பு ரூ.55 கோடி. இதில் அதிகப்படியான வருமானம் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ஐபிஎல் மூலமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிசிசிஐயின் ஏ+ கிரேடில் இடம் பெற்றிருக்கும் பும்ராவின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடி ஆகும்.

611
Jasprit Bumrah BCCI Contract

Jasprit Bumrah BCCI Contract

இது தவிர ஒவ்வொரு டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிக்கும் முறையே ரூ.15லட்சம், ரூ.7 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் வீதம் சம்பளம் பெறுகிறார்.

 

பிசிசிஐயின் ஒப்பந்தம்:

ஏ+ என்றால் ரூ.7 கோடி

ஏ – ரூ.5 கோடி

பி – ரூ.3 கோடி

சி – ரூ.1 கோடி

711
Jasprit Bumrah IPL Salary

Jasprit Bumrah IPL Salary

கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் மூலமாக ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட பும்ரா, அடுத்தடுத்த சீசன்களில் முறையே ரூ.1.2 கோடிக்கு விளையாடியுள்ளார். இதையடுத்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ரூ.7 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.12 கோடி கொடுத்து தக்க வைக்கப்பட்டார்.

811
Jasprit Bumrah Brand Endoresements

Jasprit Bumrah Brand Endoresements

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் ஐபிஎல் மூலமாக ரூ.68 கோடி வரையில் வருமானம் பெற்றுள்ளார். திறமையின் உச்சத்தில் இருக்கும் பும்ரா, பல விளையாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். ASICS, OnePlus Wearables, Payments மற்றும் group dining platform, Zaggle, Seagram's Royal Stag, போன்ற பல பிராண்டுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், இசை ஆடியோ நிறுவனம், BOAT, Dream11, Cultsport, இந்திய மொபைல் துணை நிறுவனம், UNIX மற்றும் Estrolo ஆகிய நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளார்.

911
Jasprit Bumrah House Value

Jasprit Bumrah House Value

Moneycontrol அறிக்கையின்படி ஒரு விளம்பரத்திற்கு ரூ.1.5 கோடி முதல் ரூ.2. கோடி வரையில் சம்பளம் பெறுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. மும்பையில் ஆடம்பரமான சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார். அந்த பங்களாவின் மதிப்பு மட்டும் ரூ.2 கோடி ஆகும்.

1011
Jasprit Bumrah Houses

Jasprit Bumrah Houses

அகமதாபாத்தில் சொந்தமாக வீடு ஒன்றும் உள்ளது. அதனுடைய மதிப்பு ரூ.3 கோடி ஆகும். இதுதவிர 2015 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் ரூ.3 கோடி மதிப்பில் ஒரு அபார்ட்மெண்ட் ஒன்றையும் வாங்கியிருக்கிறார்.

1111
Jasprit Bumrah Car Collection

Jasprit Bumrah Car Collection

மெர்சிடஸ் – மேபேஸ் எஸ்560, ரேஞ்ச் ரோவர் வேலர், நிசான் ஜிடிஆர், சுசூகி டிசைர், டொயோட்டோ கிரிஸ்டா, ஹூண்டாய் வெர்னா, டோயோட்டோ எடியாஸ் என்று விதவிதமாக கார் ரகங்களை வைத்திருக்கிறார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஐபிஎல்
மும்பை இந்தியன்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved