ஒரே பாட்டு ஆனா 2 வெர்ஷன்.. இசைஞானியின் இந்த பாட்டுக்களை கேட்டு இருக்கீங்களா!
தமிழ் சினிமாவில் மகிழ்ச்சியான பாடல்களை மட்டுமல்லாமல், சோகத்தை வெளிப்படுத்தும் பாடல்களையும் இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். தர்ம யுத்தம், பூந்தோட்டக்காவல்காரன், அன்புள்ள ரஜினிகாந்த், பாசப்பறவைகள், எஜமான் போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்களே இதற்கு சான்றாகும்.
Pathos Of Maestro Ilaiyaraaja
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான தர்ம யுத்தம் படம் அண்ணன் - தங்கை பாசம், காதல் என பல வெரைட்டியை ரஜினிக்கு தந்தது. அதில் இடம்பெற்ற ஒரு தங்க ரதத்தில் பாடல் இன்று வரை கிராமங்கள் தோறும் ஒலிக்கிறது. சங்கக் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு, அருமையான வரிகளை எழுதினார் கண்ணதாசன். மலேசியா வாசுதேவன் பாடிய இப்பாடலை தன்னுடைய சோக வெர்சன் ஒன்று பாடியிருப்பார். ஆனால் இதனை பலரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை.
Vijayakanth
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் வாழ்க்கையில் மிக முக்கியமான படம் பூந்தோட்டக்காவல்காரன். செந்தில் நாதன் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தின் 'நீ எங்கள் நெஞ்சத்தில்' பாடல் விஜயகாந்தின் மறைவின் போது பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது என்றே கூறலாம். கே.ஜே.யேசுதாஸ் - பி.சுசீலா பாடிய சிந்திய வெண்மணி பாடலை இளையராஜா கடைசி க்ளைமேக்ஸ் காட்சியில் சோகமாக பாடி அக்காட்சிக்கு உயிர் கொடுத்திருப்பார்.
Anbulla Rajinikanth
இயக்குனர் கே.நடராஜ் இயக்கத்தில் கடந்த 1984 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அன்புள்ள ரஜினிகாந்த். ரஜினி ரசிகர்களால் மறக்க முடியாத பாடல் இடம்பெற்ற படம் என்றும் கூறலாம். ரோஸி என்ற கதாபாத்திரத்தில் நடிகை மீனா நடித்திருப்பார். முத்துமணி சுடரே வா என்ற பாடல் பாடகர் யேசுதாஸ் குரலில் வந்திருக்கும். அதே போல கடைசியில் அப்பாடலை உருக்கமாக சோக வெர்சனில் பாடியிருப்பார் இசைஞானி இளையராஜா.
Ilaiyaraaja Song
சிவக்குமார், மோகன், லட்சுமி, ராதிகா சரத்குமார் நடித்த பாசப்பறவைகள் படமும் இளையராஜாவின் இசை திறமைக்கு சான்று ஆகும். இசைஞானியின் இசையில் யேசுதாஸ், சித்ரா பாடிய தென்பாண்டி தமிழே பாடலின் ஒரு வெர்ஷன் மகிழ்ச்சி என்றால், கடைசியில் நீதிமன்றத்தில் ஒழிக்கும் பாத்தோ பாடல் இளையராஜாவை தவிர்த்து வேறு யாரையும் அங்கு வைக்க முடியாது என்பதை நிரூபிக்கிறது.
Rajinikanth
ரஜினிகாந்த், மீனா, நெப்போலியன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த எஜமான் படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்கள் பிடிக்காதவர்கள் யார் தான் இருக்க முடியும். ஒரு நாளும் உனை மறவாத பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் - எஸ் . ஜானகி பாடியிருப்பார்கள். மீனா படத்தில் இறக்கும் காட்சியில் இளையராஜாவின் மெல்லிய சோக குரல் பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கும்.
பாரதி ராஜாவின் முதல் பட ஹீரோயின் ஜெயலலிதாவா? டேக் ஆஃப் ஆகாமல் போன ஹிட் படம்!