- Home
- Gallery
- நான் ஸ்கூல் படிக்க 365 ரூபா செலவாச்சு... என் பேரனை LKGல சேர்க்க இத்தனை லட்சம் கேக்குறாங்க- சிவக்குமார் ஆதங்கம்
நான் ஸ்கூல் படிக்க 365 ரூபா செலவாச்சு... என் பேரனை LKGல சேர்க்க இத்தனை லட்சம் கேக்குறாங்க- சிவக்குமார் ஆதங்கம்
நடிகர் கார்த்தியின் மகனை பள்ளியில் சேர்க்க லட்சக்கணக்கில் பணம் கேட்கிறார்கள் என நடிகர் சிவக்குமார் கல்வி விருது விழாவில் பேசி உள்ளார்.

sivakumar
நடிகர் சிவக்குமாரும் அவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து அகரம் என்கிற அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். அந்த அறக்கட்டளை மூலம் படிக்க பணமின்றி கஷ்டப்படும் ஏழை எளிய மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அகரம் அறக்கட்டளையில் பயின்று இன்று டாக்டராகவும், இன்ஜினியராகவும் ஏராளமான மாணவ, மாணவிகள் பணியாற்றி வருகின்றனர். இப்படி பலரின் கல்விக் கனவை நனவாக்கி இருக்கிறது இந்த அகரம் அறக்கட்டளை.
actor sivakumar
அந்த அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கல்வி விருது விழா நடத்தப்பட்டு, அதில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை கெளரவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, சிவக்குமார், கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் விருதுகளை வழங்கி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
இதையும் படியுங்கள்... ரவிவர்மன் உடன் டிஸ்யூம்... LIK படத்திலிருந்து அதிரடியாக நீக்கிய விக்கி - பர்ஸ்ட் லுக் மூலம் வெளிவந்த உண்மை
sivakumar school fees
இந்த விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், அந்த காலத்தைக் காட்டிலும் தற்போது கல்வி எவ்வளவு காஸ்ட்லி ஆகிவிட்டது என்பது குறித்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். உதாரணத்திற்கு தன்னுடைய கல்வி செலவை கணக்கிட்டு சொன்ன அவர் வெறும் 365 ரூபாய் செல்வில் தான் 10 வகுப்பு வரை படித்துவிட்டதாக கூறினார். ஆனால் தற்போது தன் பேரனை எல்.கே.ஜி.யில் சேர்க்க லட்சக்கணக்கில் பீஸ் கேட்கிறார்கள் என கூறியதோடு அந்த தொகையையும் வெளியிட்டார்.
Surya, karthi, sivakumar
அதன்படி நடிகர் கார்த்தியின் மகன் கந்தனை எல்.கே.ஜியில் சேர்க்க இரண்டரை லட்சம் ரூபாய் கேட்கிறார்கள் என சிவக்குமார் கூறினார். இதைக்கேட்ட அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர். சிவக்குமாரின் பேச்சைக்கேட்ட சிலர், ஏன் அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டியது தான என கமெண்ட் செய்து வருகின்றனர். சிலரோ நடிகர்கள் சம்பளத்தை உயர்த்துவது போல பள்ளிகளும் பீஸை உயர்த்திவிட்டனர் என கமெண்ட் செய்கின்றனர்.
இதையும் படியுங்கள்...பொண்ண பெக்க சொன்னா தேவதைய பெத்து வச்சிருக்காங்க... அஜித் - ஷாலினியின் மகள் அனோஷ்காவின் கார்ஜியஸ் கிளிக்ஸ்