தளபதி வீட்டின் முன் திமுக நிர்வாகி தீக்குளிப்பு! ஆபத்தான நிலையில் சிகிச்சை! வெளியான அதிர்ச்சி காரணம்!
DMK executive Suicide Attempt: மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ வீட்டு முன்பு கட்சி நிர்வாகி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Madurai DMK MLA Thalapathi
திமுக மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாநகர் மாவட்ட செயலாளருமான தளபதி வீடு திருப்பரங்குன்றம் பசுமலை அருகே உள்ள மூலக்கரை பகுதியில் உள்ளது. இன்று காலை 7.30 மணியளவில் மானகிரி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி கணேசன் எம்எல்ஏ வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
DMK Executive
இந்நிலையில், 8 மணியளவில் வெளியெ வந்த கணேசன் திடீரென வெளியே தான் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஓடி வந்து தீயை போராடி அணைத்தனர். பின்னர் வலியால் துடித்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
Police Investigation
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக கட்சி நிர்வாகி எம்எல்ஏ வீட்டின் மூன்பு தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.