MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பாரி வள்ளல் போல் ஏழைகளுக்கு வாரி வழங்கும் தங்கமான மனுஷன்... விஜயகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பாரி வள்ளல் போல் ஏழைகளுக்கு வாரி வழங்கும் தங்கமான மனுஷன்... விஜயகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்த் இன்று உடல்நலக்குறைவால் மரண மடைந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Dec 28 2023, 01:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

80-களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் விஜயகாந்த். அக்காலகட்டத்தில் ரசிகர்களின் நாடித்துடிப்பை நன்கு புரிந்து வைத்திருந்த விஜயகாந்த், ஒரே நேரத்தில் கிராமிய படங்கள், துடிப்பான இளைஞர் கதாபாத்திரம் அடங்கிய படங்கள், காவல்துறை கதைக்களம் என்று ஆல் ரவுண்டராக இருந்து வந்தார். பல தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்களும் பரவலாக வேற்று மொழி படங்களில் நடித்து வந்தாலும், தமிழ் படங்கள் அன்றி வேறு மொழிகளில் நடிக்காத நடிகர் என்கிற புகழுடன் வலம் வந்தவர் விஜயகாந்த்.

26

ஆந்திராவில் இவரது படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு வசூலை வாரிக்குவித்த காலகட்டத்திலும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி தெலுங்கு திரையுலகம் பக்கம் செல்லாமல் நடித்தால் தமிழ் படங்களில் மட்டுமே நடிப்பேன் என திட்டவட்டமாக இருந்தார் விஜயகாந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு, கார்த்திக், பாக்கியராஜ் என 80களில் தமிழ் திரையுலகில் 7 முன்னணி நட்சத்திரங்கள் மட்டுமே கோலோச்சி இருந்தனர்.

36

இந்த 7 நடிகர்களில் விஜயகாந்த் தனித்துவம் வாய்ந்தவராக இருந்தார். ஒரே வருடத்தில் எக்கச்சக்கமான படங்களை நடித்த முன்னணி நடிகர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் விஜயகாந்த் தான். திரையுலகில் தன்னுடைய திறமையால் உச்சத்துக்கு சென்ற விஜயகாந்த் அரசியலிலும் ஜெயலலிதா, கருணாநிதி என இரு பெரும் துருவங்கள் இருந்தபோதே தனிக்கட்சி தொடங்கி அதில் வெற்றிநடைபோட்டு வந்தார். 

இதையும் படியுங்கள்... கேப்டனின் ரசிகை டூ தேமுதிக பொதுச்செயலாளர்... யார் இந்த பிரேமலதா விஜயகாந்த்? அவர் கடந்து வந்த பாதை

46

ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இரு ஜாம்பவான் நடிகர்கள் தமிழ் திரையுலகில் வெளிச்சம் பெற்றிருந்த காலகட்டத்தில் கருப்பான தோற்றத்துடன், எந்தவித சினிமா மற்றும் அரசியல் பின்புலமும் இல்லாத விஜயகாந்த், தன்னுடைய கடுமையான உழைப்பினால் மட்டும் முன்னணி நட்சத்திரமாக தன்னை உயர்த்திக்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு தர்க காரியங்களில் ஈடுபட்ட தமிழன் என்றால் அது விஜயகாந்த் தான்.

56

இப்படி தமிழ் சினிமா மட்டுமின்றி தமிழ்நாட்டு அரசியலிலும் தவிர்க்க முடியாத ஒருவராக இருந்துவந்த விஜயகாந்த் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. விஜயகாந்தின் மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம்.

66

கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதித்து இருந்தாலும் அதனை தன்னுடைய அரசியல் கட்சிக்காகவும் தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு வாரிக்கொடுத்தும் பல்வேறு உதவிகளை செய்து இருக்கிறார். இன்று நூறு கோடி, 200 கோடி என சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு நிகராக பெயரையும் புகழையும் கொண்ட விஜயகாந்த் தனக்கென சேர்ந்து வைத்துள்ள சொத்தின் மதிப்பு ரூ.40 முதல் ரூ.45 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 

விஜயகாந்துக்கு சொந்தமாக கல்லூரியும் உள்ளது. இதுதவிர லெக்சஸ், இனோவா, பார்சூனர் உள்பட ஏராளமான சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார் விஜயகாந்த். மேலும் இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம், விவசாய நிலங்கள் மற்றும் சொகுசு வீடுகளும் உள்ளன. 

இதையும் படியுங்கள்... ரோஜா, த்ரிஷா ஜூனியர் NTR உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரேமலதா விஜயகாந்த்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved