- Home
- Gallery
- Nayanthara: ரோட்டில் உட்கார்ந்து அட்டகாசம் செய்த மகன்! காதல் முதல் சேட்டை வரை... நயன்தாரா பகிர்ந்த போட்டோஸ்!
Nayanthara: ரோட்டில் உட்கார்ந்து அட்டகாசம் செய்த மகன்! காதல் முதல் சேட்டை வரை... நயன்தாரா பகிர்ந்த போட்டோஸ்!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி குழந்தைகளோடு டிஸ்னி லாண்ட் சென்றுள்ள நிலையில்... தற்போது நயன்தாரா கியூட் மொமெண்ட்ஸ் குறித்த புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினிகாந்த என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் பெயர் எடுத்தவர்.
நயன்தாரா நடித்தால் அந்த படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று, சென்டிமெண்டாக இவரை நடிக்க வைக்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நினைப்பது உண்டு.
அப்படி ஒரு செண்டிமெண்ட் அட்லீக்கு ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல பல முறை கை கொடுத்துள்ளது. தன்னுடைய முதல் படமான 'ராஜா ராணி' படத்தில் அட்லீ நயன்தாராவை தான் நாயகியாக நடிக்க வைத்தார் இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
அதே போல் தளபதி விஜய்யை வைத்து அட்லீ 3-ஆவது முறையாக இயக்கிய 'பிகில்' படத்திலும் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார் இந்த படமும் தாறுமாறு ஹிட் அடித்தது.
கோலிவுட் திரையுலகில் இருந்து பாலிவுட் சென்ற அட்லீ, சென்டிமெண்டாகவே நயன்தாராவை ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க வைத்ததாக கூறப்பட்டது. அவரின் அதிஷ்டமே இப்படம் 1200 கோடிக்கு மேல் வசூலையும் வாரி குவித்தது.
நயன்தாராவின் செண்டிமெண்ட் மற்றவர்களுக்கு கை கொடுத்தது போல், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கை கொடுத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. 'போடா போடி' படத்தில் விக்னேஷ் சிவன் பெரிதாக கவனம் பெறவில்லை என்றாலும், நயன்தாராவை ஹீரோயினாக வைத்து இயக்கிய நானும் ரவுடிதான் படம், தரமான வெற்றியை பதிவு செய்தது.
அதே போல், தானா சேர்ந்த கூட்டம் வெற்றிபெறவில்லை என்றாலும், நயன் - சமந்தாவை வைத்து இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் அமைந்தது.
மேலும் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்கி இயக்கி வரும் LIC படத்திலும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் விரைவில் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.
Rajinikanth: இமயமலை அடிவாரத்தில் நின்று கூலிங் கிளாஸுடன் கூல் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்!
தற்போது நயன் - விக்கி இருவரும் தங்களின் பணிகளை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, குழந்தைகளோடு ஹாங்கான் சென்று விடுமுறையை கொண்டாடி வருகிறார்கள். நேற்றைய தினம் 'போடா போடி' படத்தின் ஷூட்டிங் நடந்த டிஸ்னி லாண்டுக்கு 12- ஆண்டுகளுக்கு பின்னர் வந்திருப்பதாக விக்கி உருக்கமாக பதிவிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து நயன்தாரா தற்போது டிஸ்னி லாண்ட் பகுதியில், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டது, குழந்தைகளுடன் விளையாடியது, மற்றும் கணவருடன் ரொமான்ஸ் செய்தது போன்ற கியூட் போட்டோசை வெளியிட அவை ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.