- Home
- Gallery
- கம்மி பட்ஜெட்டில் நண்பர்களோடு ஜாலியாக லே மற்றும் லடாக்கை பார்க்க வேண்டுமா.. விலை ரொம்ப கம்மி!
கம்மி பட்ஜெட்டில் நண்பர்களோடு ஜாலியாக லே மற்றும் லடாக்கை பார்க்க வேண்டுமா.. விலை ரொம்ப கம்மி!
குறைந்த விலையில் ஐஆர்சிடிசி லே மற்றும் லடாக் டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றி காணலாம்.

IRCTC Leh Ladakh Tour Package
ஐஆர்சிடிசியின் லே மற்றும் லடாக் டூர் பேக்கேஜ் 7 இரவுகள் மற்றும் 8 பகல்களைக் கொண்டது. இந்த சுற்றுலா தொகுப்பு கோழிக்கோட்டில் இருந்து தொடங்கும். இந்த டூர் பேக்கேஜில், சுற்றுலா பயணிகள் லே, ஷியாம் பள்ளத்தாக்கு, நுப்ரா பள்ளத்தாக்கு, துர்டுக் மற்றும் பாங்காங் ஆகிய இடங்களுக்குச் செல்வார்கள்.
IRCTC Tour Packages
இந்த டூர் பேக்கேஜ் டெகோ அப்னா தேஷின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜ் செப்டம்பர் 13 முதல் தொடங்கும். ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சுற்றுலா பயணிகள் இந்த டூர் பேக்கேஜை முன்பதிவு செய்யலாம்.
Leh Ladakh Tour Package
இந்த டூர் பேக்கேஜில் நீங்கள் தனியாக பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.61,700 கட்டணம் செலுத்த வேண்டும். டூர் பேக்கேஜில் இரண்டு பேருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.56,750 செலுத்த வேண்டும். மூன்று பேருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.56,200 கட்டணமாக செலுத்த வேண்டும்.
Indian Railways
5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுடன், நீங்கள் 50,100 ரூபாய் செலுத்த வேண்டும். படுக்கை இல்லாமல், 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் ரூ.50,100 செலுத்த வேண்டும். ஐஆர்சிடிசி சுற்றுலா பயணிகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ்களை தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் பட்ஜெட் ரூ.15 ஆயிரம் ரூபாய் தானா.. பட்ஜெட்டிற்குள் அடங்கும் தரமான 5 ஸ்மார்ட்போன்கள்..