சாக்லேட் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் நபரா? முதல்ல இத படிங்க!!
Chocolate Disadvantages : நீங்கள் சாக்லேட் அதிகம் சாப்பிடும் விரும்பும் நபர் என்றால், இந்த பதிவு உங்களுக்கான தான். ஏனெனில், சாக்லேட் அதிகம் சாப்பிடுவதால் ஆரோக்கியத்தில் சில பக்க விளைவுகள் ஏற்படும். அதைப்பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சாக்லேட் என்றாலே நாவில் எச்சில் ஊறும். பலருக்கு சாக்லேட் உயிராக இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு சாக்லேட் சாப்பிடவில்லை என்றால், அவர்களுக்கு அந்த நாள் முழுமையடையாது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள்.
சாக்லேட் சாப்பிடுவது ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அதை அளவாக எடுத்துக் கொண்டால்தான் கிடைக்கும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே, சாக்லேட் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
செரிமான பிரச்சனைகள் : அளவுக்கு அதிகமாக சாக்லேட் சாப்பிட்டால் வயிறு உப்புசம், மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும். ஏனெனில், சாக்லேட்டில் அதிக அளவு கொழுப்பு, சர்க்கரை மற்றும் காஃபின் உள்ளது. இவை மோசமான செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இரத்த சர்க்கரை அளவு உயரம் : சாக்லேட்டில் அதிக அளவு இனிப்பு இருப்பதால், அதிகமாக எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனடியாக உயரும் இதனால் சோர்வு, எரிச்சல், எடை அதிகரிப்பு, உயரத்த அழுத்தம் மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.
காஃபின் அதிகம் உள்ளது : சாக்லேட்டில் காஃபின் அதிகம் உள்ளதால், இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் கவலை, நடுக்கம், படபடப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி அதிகப்படியான காஃபின் தூக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும் ஓய்வு இல்லாமல் எப்போதும் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும்.
இதையும் படிங்க: அடிக்கடி டார்க் சாக்லேட் சாப்பிடுவீங்களா? அப்ப இதை படிங்க.. பல நன்மைகள் இருக்காம்..
எடை அதிகரிக்கும் : சாக்லேட்டில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடும்.
இதையும் படிங்க: Relationship Tips : படுக்கையறையில் என்ஜாய் பண்ண.. உடலுறவுக்கு முன் 'இத' கண்டிப்பா சாப்பிடுங்க..!!
ஒவ்வாமை பிரச்சனை : சிலருக்கு சாக்லேட்டில் இருக்கும் பால், நட்ஸ் அல்லது சோயா போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால், அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.