- Home
- Gallery
- தம்பி உடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் அதிதி ஷங்கர்.. Cringe என வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் போட்டோஸ்..
தம்பி உடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் அதிதி ஷங்கர்.. Cringe என வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் போட்டோஸ்..
நடிகை அதிதி ஷங்கர் தனது தம்பி அர்ஜித் உடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இருக்கிறார். இவர் இயக்கிய பல பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று அதிக வசூல் செய்த படங்களாக மாறி உள்ளது. இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற இரு மகள்களும், அர்ஜித் என்ற மகனும் உள்ளனர்.
Aditi shankar
இதில் டாக்டருக்கு படித்த அதிதி, நடிப்பு மீது தனக்கு நீண்டகாலமாக இருந்த ஆர்வத்தை கூறி அவர்களிடம் நடிக்க சம்மதம் வாங்கினார். இதை தொடர்ந்து 2022-ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அதிதி..
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி நடித்திருந்தார். மேலும் முதல் படத்திலேயே கிராமத்து கதாநாயகியாக நடித்த அதிதிக்கு பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றார். மேலும் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் அதிதி வென்றார்.
விருமன் படத்திலேயே மதுர வீரன் பாடல் மூலம் பாடகியாகவும் அறிமுகமானார் அதிதி. இதை தொடர்ந்து மடோன் அஷ்வின் இயக்கிய மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார். இந்த படமும் வணிக ரீதியில் வெற்றி படமாகவே அமைந்தது.
இதை தொடர்ந்து தற்போது விஷ்ணுவர்தன் இயக்க உள்ள புதிய படத்திலும் அதிதி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதிதி ஷங்கர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அதிதி ஷங்கரும் கண்கவர் உடையில் நடனமாடி அசத்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதே போல் இந்த இசை வெளியீட்டு விழாவில் ஷங்கரின் மகன் அர்ஜித்தும் நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தார்.
இந்த சூழலில் அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அதிதி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது தம்பி அர்ஜித்துடன் கூலாக போஸ் கொடுக்கும் போட்டோக்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் சிலர் பாராட்டினாலும், சிலர் அதிதி க்ரிஞ்ச் செய்வதாக ட்ரோல் செய்தும் வருகின்றனர்.