மீண்டும் ரெபெல் ஸ்டாருடன் இணையும் கோலிவுட் குயின்.. "அனிமல்" இயக்குனர் போடும் பக்கா பிளான் - நடக்குமா?
Prabhas : ரெபெல் ஸ்டார் என்ற பட்டதோடு தெலுங்கு திரையுலகில் பல மெகா ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார் நடிகர் பிரபாஸ்.
prabhas new movie
தொடக்க காலத்தில் பிரபாஸை வைத்து திரைப்படங்களை தயாரிக்க தயங்கிய தயாரிப்பாளர்கள், இன்று அவருடைய கால் சீட் கிடைத்து விடாதா? என்று ஏங்கி நிற்கும் நிலை தான் உள்ளது. அந்த அளவிற்கு படத்துக்கு 100 முதல் 150 கோடி வரை சம்பளம் பெரும் டாப் நடிகராக மாறியுள்ளார். கடந்த சில வருடங்களாகவே, சில பிளாப் படங்களை அவர் கொடுத்திருந்தாலும் கூட, ரசிகர்கள் மத்தியில் ரெபெல் ஸ்டாருக்கு இருக்கும் வரவேற்பு கொஞ்சம் கூட குறையவில்லை.
Shriya Saran: 40 வயதை கடந்த போதிலும் கவர்ச்சியில் துளியும் குறை வைக்காத ஸ்ரேயா சரண்
Trisha
இந்நிலையில் அவருடைய தொடக்க காலத்தில் அவருடைய பல படங்களில் சேர்த்து நடித்து அசத்திய நடிகை தான் நம்ம கோலிவுட் குயின் த்ரிஷா. பிரபாஸ் & த்ரிஷா கூட்டணியில் வர்ஷம், பௌர்ணமி, புஜ்ஜிகாடு ஆகிய படங்கள் உருவாகின. அது மட்டுமல்லாமல் இவர்களின் கெமிஸ்ட்ரியும் படங்களில் சூப்பர் ஹிட்டானது. அந்த கெமிஸ்ட்ரி, இவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக சொல்லும் அளவிற்கு இருந்து என்பதே ஹைலைட்.
actress trisha
நடிகை திரிஷாவும் கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வில் இருந்து வந்த நிலையில், இப்பொது மீண்டும் தளபதி விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். ஒரு பான் இந்திய நடிகையாக மாறியுள்ள திரிஷா, இப்போது மீண்டும் பிரபாஸுடன் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சில இயக்குனர்கள் அதற்காக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்களாம்.
actress trisha krishnan
அந்த வகையில் "அனிமல்" மற்றும் "அர்ஜுன் ரெட்டி" போன்ற படங்களைத் தந்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, இப்போது பிரபாஸை வைத்து "ஸ்பிரிட்" என்ற படத்தைத் எடுக்கவுள்ளார். ஆகவே அந்த படத்தில் தான் பிரபாஸுக்கு ஜோடியாக த்ரிஷாவை களமிறக்க அவர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. எதிர்வரும் 2025ம் ஆண்டு அந்த பட பணிகள் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அந்த படத்தில் த்ரிஷா இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.