- Home
- Gallery
- ரோஜா அம்மா உடன் நெருக்கமான அஜித்.. போட்டோவால் கடுப்பான ஆர்.கே.செல்வமணி.. Throwback ஸ்டோரி..
ரோஜா அம்மா உடன் நெருக்கமான அஜித்.. போட்டோவால் கடுப்பான ஆர்.கே.செல்வமணி.. Throwback ஸ்டோரி..
பிரபல இயக்குனரும் நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே செல்வமணி தனக்கும் நடிகர் அஜித்திற்கும் இருந்த மனக்கசப்பு குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

RK Selvamani
பிரபல இயக்குனரும் நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே செல்வமணி தனக்கும் நடிகர் அஜித்திற்கும் இருந்த மனக்கசப்பு குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி, மக்களாட்சி என பல பிளாக்பஸ்டர் படங்களை இயக்கியவர் ஆர்.கே. செல்வமணி. இதை தொடர்ந்து அவர் இயக்கிய சில படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனிடையே நடிகை ரோஜாவை அவர் திருமணம் செய்துகொண்டார்.
RK Selvamani Roja
இந்த நிலையில் தனக்கும் நடிகர் அஜித்திற்கும் இருந்த மனக்கசப்பு குறித்து ஆர்.கே செல்வமணி பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய அவர் “ அசுரன் என்ற படத்தை நான் இயக்கிய போது அந்த படத்தில் நடிக்க இளம் ஜோடி தேவைப்பட்டது. அப்போது தான் அந்த கேரக்டருக்கு அஜித்தை தேர்வு செய்யுமாறு ஜான் என்பவர் என்னிடம் பரிந்துரை செய்தார். அஜித்தையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
Ajith
அஜித்தை பார்த்த உடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவரின் பாடி லாங்குவேஜில் அவ்வளவு தன்னம்பிக்கை இருந்தது. மேலும் அவர் பெரிய ஹீரோவாக வருவார் என்று அப்போதே என் மனதில் பட்டது.
ஆனால் அந்த கேர்கடருக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்பதால் நான் ஜானிடம் அஜித் வேண்டாம். வேறொரு ஜூனியர் ஆர்டிஸ்டை வைத்து படப்பிடிப்பை நடத்தலாம் என்று கூறினேன். ஆனால் அஜித்தோ இல்லை சார், நானே செய்கிறேன் என்று கூறினார். அவர் எவ்வளவோ சொல்லியும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. செம்பருத்தி போன்ற ஒரு படத்தில் அஜித்தை ஹீரோவாக போட்டு எடுக்கலாம் என்று சொன்னேன்.
Ajith
அதன்பின்னர் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ என்ற படத்தில் அஜித், என் மனைவியுடன் இணைந்து நடித்தார். பொதுவாக, எனது மாமியார் ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கெல்லாம் செல்ல மாட்டார். ஆனால், அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு அவர். அப்போது எனது மாமியாருக்கும் அஜித்திற்க்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. மேலும் எனது மாமியார் அஜித்துடன் மிகவும் நெருக்கமாகி விட்டார்..
Ajith
அஜித் எப்போதுமே எனது மாமியாரை அம்மா என்று அழைப்பார், ஒருக்கட்டத்தில் என்னுடைய மாமியார் அஜித்திற்கு என்று தனியாக சாப்பாடு செய்து கொடுக்கவும் ஆரம்பித்தார். ஆனால் அதை பார்த்தவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது. என் மாமியாரை நான் திட்டினே. அஜித் என்னை அம்மா என்று அழைத்து விட்டான், அதனால் எனக்கு அவர் இன்னொரு பிள்ளை தான். தனது அறையிலும் அஜித் போட்டோவையே எனது மாமியார் மாட்டி உள்ளார். இப்போது கூட அந்த போட்டோ உள்ளது.
Ajith
அதன்பின்னர் அஜித்திற்கும், எனக்கும் ஒரு நிகழ்ச்சியில் மனஸ்தாபம் ஏற்பட்டது. அது கலைஞருக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் பேசிய அஜித், தன்னை மிகவும் கட்டாயப்படுத்தி அழைத்ததாக, கொந்தளித்து பேசி இருந்தார். உண்மையில், நாங்கள் அவரை அந்த நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி கட்டாப்படுத்தவே இல்லை.
RK Selvamani Ajith
அந்த சமயத்தில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தில்தான் அஜித் படங்களை செய்து கொண்டிருந்தார். அப்போது விநியோகஸ்தர்களுக்கும் அஜித்திற்கும் ஏற்பட்ட பிரச்சனையால் விநியோகஸ்தர்கள் அவருக்கு ரெட் கார்டு கொடுத்துவிட்டார். இந்த கோபத்தைதான் அஜித் அந்த மேடையில் காண்பித்தார். அப்போது, கவுன்சில் சார்பாக சில நடவடிக்கைகளை அவர் மீது எடுத்தோம். அதில் அஜித்திற்கும் என் மீது வருத்தம் இருந்தது.” என்று ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார்.