- Home
- Gallery
- 'பருத்திவீரன்' பிரச்சனை பற்றி சூர்யா பேசாமல் இருந்ததற்கு இது தான் காரணம்! பாண்டிராஜ் பகிர்ந்த தகவல்!
'பருத்திவீரன்' பிரச்சனை பற்றி சூர்யா பேசாமல் இருந்ததற்கு இது தான் காரணம்! பாண்டிராஜ் பகிர்ந்த தகவல்!
'பருத்தி வீரன்' பிரச்சனை 17 வருடங்கள் ஆகியும் ஓயாத நிலையில்... இதுகுறித்து நடிகர் சூர்யா தானாக முன் வந்து விளக்கம் கொடுக்காததற்கு என்ன காரணம் என்று இயக்குனர் பாண்டி ராஜ் கூறியுள்ளார்.

இயக்குனர் அமீர் இயக்கத்தில், கார்த்தி -பிரியா மணி நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பருத்திவீரன். இந்த படத்தின் மூலம் தான், துணை இயக்குனராக இருந்த கார்த்தி ஹீரோவாக அவதாரம் எடுத்தார். கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில் தற்போது வரை ஒரு மாஸ்டர் பீஸாக இருக்கும் இந்த படத்தில் நடித்ததற்காக பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.
paruthiveeran
படம் சூப்பர் ஹிட் என்றாலும், தயாரிப்பு தரப்பு மற்றும் இயக்குனர் அமீர் இடையே இப்படம் குறித்து தற்போது வரை பல்வேறு முரண்பாடுகள் நிலவி வருகிறது. அதாவது அமீர் தவறாக கணக்கு காட்டியதாகவும், 6 மாதத்தில் எடுத்து முடிக்கவேண்டிய படத்தை 2 வருடத்திற்கு இழுத்தடித்ததாக கடந்த ஆண்டு ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டி மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கியது.
அசின், பூஜா, சுவலட்சுமி என தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போன 7 ஹீரோயின்ஸ்! யார் யார் தெரியுமா?
paruthiveeran
இதற்க்கு இயக்குனர் அமீர் இந்த படத்தின் பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதால் தான் இவ்வளவு நாட்கள் அமைதி கார்த்ததாகவும், இந்த படத்தை 6 மாதத்தில் அப்படியே விட்டு விட்டு ஓடிய தயாரிப்பாளர் நீங்கள்... நான் வாயை திறந்தால் பல உண்மைகள் வெளியாகும் என அறிக்கை வெளியிட்டு பல உண்மைகளை போட்டுடைத்தார்.
paruthiveeran
அமீருக்கு ஆதரவாக, சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் குரல் கொடுத்தனர். குறிப்பாக சமுத்திர கனி இப்படம் உருவாகி வெளியானது முதல் அமீருடனே நான் பயணித்தேன். இந்த படத்தை முடிப்பதற்கு யாராரிடம் அவர் கடன் வாங்கி எடுத்தார் என்பது எனக்கு தெரியும். அதே நேரம் இதுபற்றி கார்த்தி வாய் திறக்காமல் இருப்பது தான் அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
paruthiveeran
மேலும் இப்படத்தை சூர்யா தயாரித்து விட்டு பின்னர் விலகிய நிலையில் அவரும் பல உண்மைகள் தெரிந்திருந்தும் பேசவில்லை என கூறப்பட்டது. இந்த விஷயம் குறித்து சூர்யாவிடம் கேட்டபோது அவர் என்ன சொன்னார் என்பதை தற்போது இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
சூர்யாவிடம், சார் நீங்கள் பருத்திவீரன் படம் குறித்து உங்களின் விளக்கத்தை கொடுக்கலாமே என கூறினேன். நம் மீது கல் எறிகிறார்கள் என்றால், நாமும் கல் எரியணுமா சார். என் மீது பெறிய மரியாதை இருக்கு அதை கெடுத்துக்க கூடாது சார் என தெரிவித்தார் என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், 'பசங்க 2' படத்தை தயாரித்து நடித்தார். அதே போல் எதற்கும் துணிந்தவன் என்கிற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கார்த்தியும் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.