"மாரி உங்க ஒர்கிங் ஸ்டைல் சூப்பர்".. வியந்து பாராட்டிய மெகா ஹிட் கோலிவுட் ஸ்டார் - அப்போ அந்த கூட்டணி உறுதியா?
Mari Selvaraj : பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ், விரைவில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஒருவரோடு இணைந்து பணியாற்ற உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
pariyerum perumal
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான ராமிடம், உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றி, கடந்த 2018ம் ஆண்டு தமிழில் வெளியான "பரியேறும் பெருமாள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக Kollywood உலகில் களமிறங்கியவர் தான் மாரி செல்வராஜ்.
Bison
தொடர்ச்சியாக "கர்ணன்" மற்றும் "மாமன்னன்" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் மாரி செல்வராஜ். தற்பொழுது "பைசன்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இறுதியாக வெளியான அவருடைய "மாமன்னன்" திரைப்படம் எவ்வளவு பெரிய வரவேற்பு பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.
Karthi
தற்பொழுது உருவாகி வரும் "பைசன்" திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தனுசுடன் இணையுள்ள மாரி செல்வராஜ், பிரபல நடிகர் கார்த்தியுடனும் ஒரு திரைப்படத்தில் இணையுள்ளதாக அண்மையில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் பேசுகிறார். விரைவில் அந்த திரைப்படத்திற்கான பணிகள் துவங்கும் என்றும் கூறியிருக்கிறார்.
Rajinikanth
இந்நிலையில் "பைசன்", தனுஷோடு ஒரு படம், அதை தொடர்ந்து கார்த்தியோடு ஒரு படம் என்று 3 படங்களை முடித்த பிறகு அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாரி செல்வராஜ் பேசியபோது "ரஜினிகாந்தை சந்தித்து பேசினேன், என்னுடைய ஒர்க்கிங் ஸ்டைல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக அவர் கூறினார், தற்பொழுது உள்ள 3 திரைப்பட பணிகளை முடித்த பிறகு, அவரோடு இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது" என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
சமந்தாவை பிரிந்த அடுத்த ஆண்டே.. நாக சைதன்யா சோபிதாவின் காதல் கதை எப்படி தொடங்கியது தெரியுமா?