கோலிவுடின் Top 3 செலிபிரிட்டீஸ்.. பக்காவா ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு கடைசியில் கைவிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்!
Gautham Vasudev Menon : காதல் பெருக்கெடுக்கும் படங்களின் தொகுப்புகளை கொடுத்து அசத்திய இயக்குனர் தான் கெளதம் வாசுதேவ் மேனன். ஆனால் அவரே கைவிட்ட சில படங்களும் உள்ளது.
GVM
கேரளாவில் பிறந்து தமிழகத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்து இயக்குனர் ஆசையோடு தமிழ் திரையுலகில் களமிறங்கிய இயக்குனர் தான் கௌதம் வாசுதேவ் மேனன்.
கடந்த 2001ம் ஆண்டு தமிழில் வெளியான "மின்னலே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய இயக்குனர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இந்த 23 ஆண்டுகால சினிமா பயணத்தில் தமிழ் சினிமாவிற்கு பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை அவர் கொடுத்துள்ளார். ஆனால் அதே நேரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து அவர் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பின் கைவிடப்பட்ட படங்களும் சில உள்ளது.
சாவித்ரி, ஸ்ரீதேவி முதல் நயன்தாரா வரை.. தென்னிந்திய சினிமாவின் எவர்கிரீன் லேடி சூப்பர் ஸ்டார்ஸ்..
Yohan
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் தளபதி விஜயை வைத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத் தொடங்கிய திரைப்படம் தான் "யோஹன் : அத்தியாயம் ஒன்று". இந்த படத்திற்கான போட்டோ ஷூட் பணிகள் கூட முடிந்து, ஏறத்தாழ படப்பிடிப்பு பணிகள் துவங்குவதற்கு முன்பு ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களால், அந்த திரைப்படம் கைவிடப்பட்டது.
Surangani
நடிகர் அஜித்தை வைத்து "என்னை அறிந்தால்" என்கின்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். ஆனால் அதற்கு முன்னதாகவே "சுராங்கனி" என்கின்ற திரைப்படத்தில் தல அஜிதை நடிக்க வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டார் GVM. சிவாஜி ப்ரோடுக்ஷன்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கவிருந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக இந்த திரைப்படம் கைவிடப்பட்டது.
Trisha
2010ம் ஆண்டு பிரபல நடிகை த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்த படம் தான் "விண்ணை தாண்டி வருவாயா". ஆனால் அதற்கு முன்பே கடந்த 2007ம் ஆண்டு சென்னையில் ஒரு மழைக்காலம் என்கின்ற திரைப்படத்தில் த்ரிஷா, GVM இயக்கத்தில் இணைந்தார். சுமார் 25 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட பிறகு, கௌதம் வாசுதேவ் மேனனே இந்த திரைப்படத்தை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.