- Home
- Gallery
- திருமணத்திற்காக இயக்குனர் அட்லீயை நம்பி ஆனந்த் அம்பானி கொடுத்த பொறுப்பு? இதுல சூப்பர் ஸ்டார் பங்கும் இருக்காம்
திருமணத்திற்காக இயக்குனர் அட்லீயை நம்பி ஆனந்த் அம்பானி கொடுத்த பொறுப்பு? இதுல சூப்பர் ஸ்டார் பங்கும் இருக்காம்
ஆனந்த் அம்பானி தன்னுடைய திருமணத்தை முன்னிட்டு, மிக முக்கியமான பொறுப்பு ஒன்றை இயக்குனர் அட்லீக்கு கொடுத்ததாகவும், இதற்க்கு சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பங்கும் இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Priya Atlee
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர், முகேஷ் மற்றும் நிதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு - ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் ஜூலை 12-ஆம் தேதி திருமணம் நடந்தது. சுமார் 5000 கோடி செலவில், சர்வதேச பிரபலங்கள் வியக்கும் வகையில் நடந்த இந்த திருமணம் நடந்து முடிந்துவிட்டாலும், அவ்வப்போது இந்த திருமணம் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில், திருமணத்திற்காக அட்லீயை நம்பி ஒரு சிறப்பு அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்க அனந்த் அம்பானி கூறியதாகவும், இதற்க்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தான் குரல் கொடுத்தார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
ஆனந்த் அம்பானி ஜவான் படத்தால் கவரப்பட்டு இந்த பொறுப்பை அட்லீக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த 10 நிமிட அனிமேஷன் திரைப்படம், திருமண விழாவில், ஷுப் ஆஷிர்வாத் நிகழ்ச்சி நடந்த போது அனைவருக்கும் போட்டு காட்டப்பட்டதாம்.
இந்த தகவலை பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா, தன்னுடைய பீர் பைசெப்ஸ் என்ற ஊடக தளத்தில் அம்பானி வீடு மூன்று நாள் திருமண விழா பற்றி பேசியபோது அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஆகாஷ் சிங்கிடம் கூறினார். திருமணத்தின் இரண்டாவது நாளில் தான், அங்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு... அட்லீ கைவண்ணத்தில் உருவான இந்த 10 நிமிட திரைப்படம் காட்டப்பட்டது. மேலும் அட்லீ இயக்கிய இந்த அனிமேஷன் திரைப்படத்திற்கு, அமிதாப் பச்சன் குரல் மிகவும் பொருத்தமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
குடிப்பழக்கம் இல்லாத மற்றும் குடியில் இருந்து மீண்ட 6 முன்னணி பிரபலங்கள்! யார் யார் தெரியுமா!
ஆனந்த் அம்பானி திருமணத்தின் கடைசி நான் கொண்டாட்டத்தின் போது, வருகை தந்து சிறப்பித்த பிரபலங்கள், திருமணத்தை நடந்து ஒத்துழைப்பு கொடுத்த மும்பை காவல் துறையினர் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.