- Home
- Gallery
- அருவி.. வாழ்.. தரமான படங்களை கொடுத்த அருண் பிரபு - அடுத்த படத்திற்கு தேர்வு செய்துள்ள நாயகன் யார் தெரியுமா?
அருவி.. வாழ்.. தரமான படங்களை கொடுத்த அருண் பிரபு - அடுத்த படத்திற்கு தேர்வு செய்துள்ள நாயகன் யார் தெரியுமா?
Director Arun Prabha : கடந்த 2016ம் ஆண்டு வெளியான "அருவி" என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இயக்குனர் தான் அருண் பிரபா.

Aruvi Movie
நடிகை அதிதி பாலன், நடிகர் பிரதீப் ஆண்டனி மற்றும் நடிகை கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்து, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் "அருவி". ஒரு எச்ஐவி நோயாளி இந்த சமூகத்தில் சந்திக்கும் சவால்களை எடுத்துரைக்கும் படமாக இது அமைந்திருந்தது. இந்த படத்தின் இயக்குனர் அருண் பிரபா அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
Vaazhl Movie
அதனைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு மீண்டும் நடிகர் பிரதீப் ஆண்டனி நடிப்பில் "வாழ்" என்கின்ற திரைப்படத்தை அருண் பிரபா இயக்கியிருந்த நிலையில் தற்போது தனது அடுத்த பட பணிகளுக்கு அவர் தயாராகி வருகிறார். ஆனால் இது முற்றிலும் கமர்சியல் கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Vijay Antony
இந்த திரைப்படத்தில் நடிக்க பிரபல நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் விரைவில் பட பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் பிரதீப் ஆண்டனி தனது twitter பக்கத்தில் தனக்கு ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், அதற்காக சில லட்சங்களை முன்பணமாக வாங்கியுள்ளதாகவும் பதிவிட்டிருந்தார். ஆகவே மூன்றாவது முறை அருண் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.