டக்குனு OK சொன்ன கமல்.. பதிலுக்காக காத்திருந்த ரஜினி.. இதனால் தான் அவங்க Legends - அன்றே சொன்ன கிரேசி மோகன்!
Kamalhaasan and Rajinikanth : இன்று பிறந்தநாள் காணும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும், பிரபல திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவுமான மறைந்த கிரேசி மோகனும் பிரிக்க முடியாத இரட்டை குழந்தைகள் என்று கூறினால் அது மிகையல்ல.
Crazy mohan
மேடை நாடகங்கள் மூலம் பிரபலமான கிரேசி மோகன் 1983 ஆம் ஆண்டு வெளியான "பொய்க்கால் குதிரை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு 1989 ஆம் ஆண்டு வெளியான உலகநாயகன் கமல்ஹாசனின் "அபூர்வ சகோதரர்கள்" திரைப்படம் மூலம் உலக நாயகனும் கிரேசி மோகனும் கைகோர்த்தனர்.
அதனை தொடர்ந்து வெளியான மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், மகளிர் மட்டும், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்று சுமார் 13 ஆண்டுகள் பல்வேறு திரைப்படங்களில் இணைந்து பணியாற்றினர் உலக நாயகனும் கிரேசி மோகனும்.
நாயகன் 2-வா? மருதநாயகமா? புது போஸ்டரை வெளியிட்டு சஸ்பென்ஸை உடைத்த Thug Life படக்குழு
Director Crazy mohan
இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடையே உள்ள நட்பு குறித்து அவருடைய இறப்புக்கு முன்னால் கிரேசி மோகன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அப்போது பேசிய அவர் கமலுக்கு நான் தொடர்ச்சியாக பல படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்து வந்தேன், அப்பொழுது 1997 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "அருணாச்சலம்" திரைப்படத்திற்கு என்னை வசனம் எழுத ரஜினி அவர்களே தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டார்.
அப்பொழுது நான் இதுகுறித்து கமலிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு உங்களிடம் பேசட்டுமா என்று கூறினேன். அதற்கு அவர் தாராளமாக கேட்டுவிட்டு உங்கள் முடிவை சொல்லுங்கள், நான் காத்திருக்கிறேன் என்று கூறினார். இது குறித்து நான் கமலிடம் பேசியதும் கொஞ்சம் கூட யோசிக்காமல் டக்கென்று நேர்த்தியாக வசனங்களை எழுதுங்கள் என்று கூறினார்.
Rajinikanth
அதேபோல என்னுடைய பதிலுக்காக புகலின் உச்சியில் இருந்த சூப்பர் ஸ்டாரும் காத்திருந்தார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இருவரும் தங்கள் துறையில் பெரிய அளவில் சாதித்த ஜாம்பவான்கள், இருப்பினும் நான் ரஜினிக்கு கதை எழுதுவது குறித்து எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காமல் உலக நாயகன் பெருமிதத்தோடு இருக்க, அவரிடம் கேட்டுத் தான் வசனம் எழுதுவேன் என்று நான் கூறியும், என்னுடைய பதிலுக்காக காத்திருந்த ரஜினியும் உண்மையில் மிகப்பெரிய நண்பர்கள்.
இதன் காரணமாகத்தான் அவர்கள் இன்றளவும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.