MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மாபெரும் வெற்றி இயக்குனர்.. ஆனால் தயாரிப்பாளராக பெரும் நஷ்டம் - அமீரை கடனாளியாக்கிய 3 முக்கிய படங்கள்!

மாபெரும் வெற்றி இயக்குனர்.. ஆனால் தயாரிப்பாளராக பெரும் நஷ்டம் - அமீரை கடனாளியாக்கிய 3 முக்கிய படங்கள்!

Producer Ameer Sultan : பிரபல நடிகர் சூர்யாவின் மௌனம் பேசியதே துவங்கி நடிகர் ஜெயம் ரவியின் ஆதி பகவன் வரை தமிழ் சினிமாவில் நான்கு திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் தான் அமீர். 

2 Min read
Author : Ansgar R
Published : Dec 16 2023, 08:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Mounam Pesiyadhe

Mounam Pesiyadhe

பிரபல இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் அவரிடம் இருந்து பல தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நடிகர் சூர்யாவின் "மௌனம் பேசியதே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக கால் பதித்தவர் தான் அமீர் என்கிற அமீர் சுல்தான். 

மௌனம் பேசியதே திரைப்படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிக மிக முக்கியமான திரைப்படம் என்று கூறினால் அது மிகையல்ல. அதனை தொடர்ந்து வெளியான ஜீவாவின் ராம் திரைப்படமும் ஒரு மைல்கல் திரைப்படமாக மாறியது, ஜீவாவின் திரை வாழ்க்கையில் இன்றளவும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்த திரைப்படம் ராம் தான்.

என் பொண்டாட்டிக்கு அப்படி ஒரு வியாதி இல்ல.. ஆனா.. - இன்ஸ்டாவில் அட்ராசிட்டி பண்ணும் சாந்தனு & கிக்கி விஜய்!

24
Paruthiveeran

Paruthiveeran

இந்த சூழலில் தான் நடிகர் கார்த்தி திரைத்துறையில் களமிறங்க காத்திருந்தார், அப்பொழுது இயக்குனர் அமீருடன் இணைந்து உருவான திரைப்படம் தான் பருத்திவீரன். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் நடிகர் கார்த்திக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தின் சர்ச்சையும் இன்றளவும் நீண்டு வருகின்றது.

34
Yogi

Yogi

மௌனம் பேசியதே படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனராக பணிபுரிந்து வந்த அமீர், ராம் மற்றும் பருத்திவீரன் ஆகிய இரு திரைப்படங்களையும் அவரே தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுப்ரமணியம் சிவா என்ற இயக்குனரின் இயக்கத்தில் அமீர் அவர்கள் நாயகனாக களம் இறங்கிய திரைப்படம் தான் யோகி. இந்த திரைப்படத்திற்கும் தயாரிப்பாளர் அமீர் அவர்கள் தான். 

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு செல்லவில்லை, அதனால் தயாரிப்பாளராக மிகப்பெரிய பொருள் நஷ்டத்தை சந்தித்தார் அமீர். அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஆதி பவன் என்ற திரைப்படத்தின் முதலில் தயாரிக்க துவங்கியது அமீர் தான், ஆனால் படம் நகர நகர யோகி படத்தின் மூலம் அவர் பெற்ற கடன் சுமை, மேற்கொண்டு அந்த திரைப்படத்தை அவரை தயாரிக்க விடாமல் செய்தது.

44
Achamillai Achamillai

Achamillai Achamillai

இறுதியில் அந்த திரைப்படத்தை அன்பு பிக்சர்ஸ் என்கின்ற நிறுவனம் தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு "அச்சமில்லை அச்சமில்லை" என்ற படத்திற்கு அஸ்திவாரமிட்ட அமீர் அவர்களுக்கு மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அந்த திரைப்படத்தை பிரபல ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தாங்கள் வெளியிடுவதாக உரிமைத்தை வாங்கிக்கொண்டு படத்தை இன்றளவும் வெளியிடாமல் இருப்பதனால் அதனால் சுமார் ஒரு கோடி ரூபாய் அமீருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களில் அவருக்கு கிடைத்த பெரிய அடி, அவரை தொடர்ந்து ஒரு தயாரிப்பாளராக பயணிக்க முடியாமல் செய்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved