உலர் பழங்கள் ரொம்ப நல்லது தான்.. ஆனா.. - சர்க்கரை நோய் இருந்தால் இந்த உலர் பழங்களை சாப்பிடாதீங்க!
Dry Fruits : உடலுக்கு பல சத்துக்களை கொடுக்க இயற்கையே நமக்கு கொடுத்துள்ள விஷயங்கள் தான் பழங்கள். அதிலும் உலர் பழங்கள் நமது உடலுக்கு ரொம்பவும் நல்லது.
Dry Raisins
பழங்களை போல உலர் பழங்கள் கூட நமது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது என்றாலும், சில வகை உலர் பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் அவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. சரி அது என்னென்னெ பழங்கள், அதை ஏன் உட்கொள்ளக்கூடாதுனு இப்பொது பார்க்கலாம்.
உலர் திராட்சை
சர்க்கரை நோய் உள்ளவர்கள் உளர் திராட்சையை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. உண்மையில், இந்த திராட்சையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்றாலும், இவற்றில் அதிக அளவு இயற்கை சர்க்கரை உள்ளது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வேகமாக உயரும்.
வெயிட் லாஸ் பண்ண மிகவும் குறைவாக சாப்பிடுறீங்களா? அப்ப முதல்ல இதை படிங்க..
Dates
பேரிச்சம்பழம்
பல நீரிழிவு நோயாளிகள் தங்களுக்கு தேவையான இயற்கையான சர்க்கரைக்காக பேரீச்சம்பழத்தை சாப்பிடுகிறார்கள். ஆனால் சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி.. பேரிச்சம்பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை திடீரென உயர்த்தும். அதனால் தான் சர்க்கரை நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் பேரீச்சம்பழத்தைத் தவிர்க்க வேண்டும்.
Dried Figs
உலர் அத்திப்பழம்
திராட்சையை போலவே உளர் அத்திப்பழத்திலும் இயற்கை சர்க்கரை அதிகமாக உள்ளது. அவை இரத்த சர்க்கரை அளவை மிக விரைவாக உயர்த்துகின்றன. அதனால் தான் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உளர் அத்திப்பழத்தை சாப்பிடக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.
Dried cranberry
உலர் குருதிநெல்லி (கிரான்பெர்ரி)
பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பழம் தான் உலர் கிரான்பெர்ரி. மேலும் இந்த பழங்கள் சிறுநீர் தொடர்பான பல பிரச்சனைகளை தீர்க்க மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த பழங்களை அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
தேனை வச்சி இந்த 6 ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க.. உங்க முகம் தங்கம் போல ஜொலிக்கும்!!