ரூ.900 கோடிப்பு... தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராக உள்ள இளையராஜா பயோபிக் - எப்போ ரிலீஸ் தெரியுமா?
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக உள்ள திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
dhanush, Ilaiyaraaja
கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம் இணைந்து, தென்னிந்தியத் திரைத்துறையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பார்வையாளர்களைக் கவரும் வகையில், அடுத்தடுத்து உருவாக உள்ள பல மெகா பட்ஜெட் படங்களை அறிவித்துள்ளது. புதிய ஸ்ட்ரீமிங் கதைகள், ஒரிஜினல் கதைகள், தென்னிந்திய சினிமாவில் பல புதிய வகை கதைகளின் வழியாக ஒரு புதிய உலகத்தை இந்த கூட்டணி ரசிகர்களுக்கு வழங்க உள்ளதாம்.
Dhanush
இந்த அற்புதமான கூட்டணி, தங்கள் முதல் திரைப்படமாக, தென்னிந்தியத் திரையுலகில் மாபெரும் சாதனையாளரான, இசை மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இத்திரைப்படத்தில் பன்முக திறமையாளர், தென்னிந்தியாவின் நட்சத்திர நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அக்டோபர் 2024 இல் தொடங்க உள்ளது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இத்திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Ilaiyaraaja
கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம், தென்னிந்தியத் திரைத்துறையில், மெகா ஸ்டார்களின் நடிப்பில், சுமார் 925 கோடி முதலீட்டில், பல பிரமாண்ட மெகா-பட்ஜெட் திரைப்படங்களைத் தயாரிக்க உள்ளது. அதில் ஒன்று தான் இளையராஜாவின் பயோபிக். இப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
Dhanush in ilaiyaraaja Biopic
கனெக்ட் மீடியாவின் வருண் மாத்தூர் கூறியதாவது : “உலகளாவிய பொழுதுபோக்கு திரைத்துறையில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்று மெர்குரி. மேலும் அவர்களுடன் இணைந்து பல மெகா பட்ஜெட் படங்களைத் தயாரிப்பதிலும் ஒரு மிகச்சிறந்த இசை மேதையின் வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்குவதிலும், நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவிலும், உலகளவிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு பிடித்தமான கதைகளை வழங்கும் என அவர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... தலைவர் 171-ல் ரஜினிக்கு வில்லனா... ஆள விடுங்கடா சாமினு தெறித்தோடிய விஜய் சேதுபதி - காரணம் என்ன?