- Home
- Gallery
- Suchi லீக்ஸூக்கு காரணம் தனுஷ்தான்.. சுசித்ரா சுமத்திய குற்றச்சாட்டுகள்.. ராயன் பட விழாவில் தனுஷ் அதிரடி!
Suchi லீக்ஸூக்கு காரணம் தனுஷ்தான்.. சுசித்ரா சுமத்திய குற்றச்சாட்டுகள்.. ராயன் பட விழாவில் தனுஷ் அதிரடி!
Dhanush Talks About Suchitra Allegations : பிரபல பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் மற்றும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில் நடிகர் தனுஷ் தனது 50வது படமான ராயன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பதிலடி கொடுத்துள்ளார்.

Dhanush Talks About Suchitra Allegations
2016 ஆம் ஆண்டில், சுசித்ரா தனது ட்விட்டர் கணக்கு மூலம் சுசீலீக்ஸ் என்ற பெயரில் வந்த நட்சத்திரங்களின் தனிப்பட்ட படங்களுக்குப் பின்னால் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
Dhanush
நடிகர் தனுஷ் மீதும் சுசித்ரா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். நடிகர் தனுஷ் மற்றும் கார்த்திக் குமார், யாரடி நீ மோகினி படத்துக்குப் பிறகு நட்பு கொண்டார்கள் என்று கூறினார் சுசித்ரா.
Singer Suchitra
தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர் தனுஷ் குறித்து அவதூறாக பல கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். அந்தக் குழுவில் எனது முன்னாள் கணவர் தனுஷ், ஆண்ட்ரியா, புகைப்படக் கலைஞர் ராமு ஆகியோர் இருந்ததாக சுசித்ரா கூறுகிறார்.
Suchi Leaks
தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும், அவர் தனுஷோடு இணைந்து குடித்துவிட்டு தனி அறையில் இருந்ததாகவும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பினார் பாடகி சுசித்ரா.
Karthik Kumar
இதுகுறித்து சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று தனுஷ் நடித்து, இயக்கும் 50வது படமான ராயன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
Raayan Audio Launch
அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ், “நான் யாருன்னு எனக்குத் தெரியும், என் அப்பா, அம்மாவுக்குத் தெரியும். என் பசங்களுக்குத் தெரியும். என் ரசிகர்களுக்குத் தெரியும்” என்று ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேச தொடங்கினார்.
Dhanush Speech at raayan audio launch
தொடர்ந்து பேசிய அவர், முதலில் இருந்தே அதிகமாக பாடி ஷேமிங்கிற்கு ஆளானவன் நான், தேவையில்லாத வதந்திகள், கெட்டப் பெயர், முதுகில் குத்தும் சம்பவம் என பல விஷயங்கள் நடக்கிறது. ஏன் நான் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா? என்ற கேள்வியும் எழுப்பி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வெள்ளை வேஷ்டி.. வெள்ளை சட்டை.. மாஸ் என்ட்ரி கொடுத்த தனுஷ் - கோலாகலமாக நடந்த "ராயன்" இசை வெளியீடு!