மாஸ் காட்டும் காத்தவராயன்.. Fastest 100 அடிக்கப்போறாப்ல - ராயன் வசூல் அப்டேட்!
Raayan Box Office : ராயன் திரைப்படம் கடந்த ஜூலை 26ம் தேதி வெளியான நிலையில், இந்த 4 நாள்களில் எவ்வளவு வசூல் செய்துள்ள என்ற தகவல் வெளியாகியுள்ளது.

raayan
பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் "ராயன்". உலக அளவில் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி வெளியாகி பெரிய அளவிலான வரவேற்பை அந்த திரைப்படம் பெற்று வருகிறது. துவண்டு கிடந்த கோலிவுட், மீண்டும் "ராயன்" படத்தால் துடிப்போடு நிமிர்ந்துள்ளது என்கிறார்கள் திரைப்பட விமர்சகர்கள்.
"எல்லை மீறும் YouTubers.. கடுமையான சட்டங்கள் வேண்டும்" உதயநிதிக்கு வேண்டுகோள்விடுத்த ராதிகா!
dhanush
பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்த நிலையில், பா பாண்டி திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷ் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். வழக்கமான செண்டிமெண்ட் கலந்த ஒரு ஆக்சன் கதை தான் என்றபோதும், தனுஷின் இயக்கம் இந்த திரைப்படத்தை மெருகேற்றியுள்ளது என்றே கூறலாம்.
AR Rahman
அதே போல தனுஷின் பங்கு 50% என்றால், இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் இசை இந்த திரைப்படத்திற்கு கூடுதலாக 50 சதவிகித பலத்தை கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு பாடல்களும் திரையில் பெருத்த கரகோஷங்களை பெற தவறவில்லை.
Raayan movie
இந்நிலையில் "ராயன்" படத்தின் 4ம் நாள் வசூல் நிலவரம் இப்பொது வெளியாகியுள்ளது. அதன்படி தமிழக அளவில் 40 கோடிக்கு மேலும், உலக அளவில் சுமார் 83 கோடியும் இதுவரை வசூல் செய்திருக்கிறது ராயன். ஆகவே சீக்கிரமே தனுஷ் 100 கோடி Box Office வசூலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீரியல் ஹீரோயினாக மாறும் அனிதா சம்பத்! ஹீரோ இவரா? யாருன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க!